நடுரோட்டில் அமர்ந்து கொண்டு கூவி கூவி மீன் விற்கும் பிரபலம்! இவர் யார் என்று தெரிகிறதா?
சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் கேபிரியலா செல்லஸ் சந்தையில் மீன் விற்கும் வீடியோக்காட்சி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் எப்படி சின்னத்திரைக்கு வந்தார் தெரியுமா?
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் சுந்தரி.
இந்த சீரியலில் கதாநாயகியாக கலக்கி வருபவர் தான் கேபிரியலா செல்லஸ். இன்று தமிழக மக்கள் மத்தியில் குட்டி தேவதையாகவும், முயற்சியுடைய பெண்ணாகவும் இடம் பிடித்துள்ளார் சுந்தரி.
இவர் சின்னத்திரை மட்டுமல்ல வெள்ளத்திரையிலும் நடித்துள்ளார். மேலும் முதன் முதலில் “கபாலி” மற்றும் “ஐரா” திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நடிகை கேபிரில்லா, ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
சந்தையில் மீன் விற்கும் பிரபலம்
இந்த நிலையில், சீரியல் ஒரு புறம் இருக்கையில், இவர் அவருடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் இவர் சந்தையில் அமர்ந்து மீன் விற்பது போன்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்க்கும் போது ஏதோ ஷீட்டிங்கிற்காக இவ்வாறு ஆக்டிங் கொடுத்து கொண்டிருக்கிறார் என்பது போல் தெரிகிறது.
ஆனால் இந்த வீடியோக் காட்சியை பார்த்த நெட்டிசன்கள், “ உண்மையாக இவர் மீன் வியாபாரியா? என கலாய்த்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.