உதவி கோரிய மாணவிக்கு ஜி.வி. பிரகாஷ் கொடுத்த ரிப்ளே!
உதவி
சில தினங்களுக்கு முன்பு பரீட்சை கட்டணம் செலுத்துவதற்கு உதவி கேட்ட மாணவிக்கு, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உடனடியாக ஜி-பே மூலம் பணம் செலுத்தியிருக்கிறார்.
இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது சமூக வலையத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஜி.வி. பிரகாஷ்
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், சிறந்த நடிகர், இசையமைப்பாளர் என்ற அடையாளங்களையும் தாண்டி தமிழர் நலனுக்காக குரல் கொடுப்பவர்களின் ஒருவராகவும் வலம் வருகிறார். உதாரணமாக ஜல்லிக்கட்டு போராட்டங்களின் போது இவர் குரல் கொடுத்துள்ளார்.
@gvprakash
— Hemapriya (@Hema_priya10) October 2, 2022
Hai Respect To sir I am Hemapriya from kombakonam i am BCA College student👩🎓 sir,s this month Exam start Attached my exam fees photo Please Kind of your Helping sir,
இந்நிலையில் கல்லூரி மாணவி ஹேமப்ரியா என்பவர் ட்விட்டரில் ஜி.வி. பிரகாஷிடம், உதவி கேட்டுள்ளார்.
தொடர்ந்து ஜி.வி பிரகாஷ் ஜி-பே மூலம் பணத்தை செலுத்தி விட்டு பதில், பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Amount sent to ur gpay
— G.V.Prakash Kumar (@gvprakash) October 2, 2022
இதற்கு ஜி.வி. பிரகாஷின் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.