G Pay, Phone Pe பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணமா? அதிர்ச்சியில் பயனர்கள்
G Pay மற்றும் Phone Pe பண வரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை
இந்தியா முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ள நிலையில் G Pay, Phone Pe, PayTm என பல பணப்பரிவர்த்தனை செயலிகள் இலவசமாக சேவைகளை வழங்கி வருகின்றது.
இதன் மூலம் மக்கள் கடைகளில் வாங்கும் சின்ன பொருட்களைக் கூட டிஜிட்டல் முறையிலேயே பணம் செலுத்தி வருகின்றனர். மிகவும் எளிதான வழிமுறைகளைக் கொண்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு முதலாக ரீசார்ஜ் பணப்பரிவர்த்தனைகளுக்கு Google Pay கட்டணம் பிடித்தம் செய்யத் தொடங்கியது.
தற்போது தங்கள் செயலிகள் வழியாக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பில் செலுத்துபவர்களுக்கு 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை சேவை கட்டணம் பிடிக்க தொடங்கியுள்ளது.
ஆனால் வழக்கமாக மக்கள் தங்கள் வங்கி கணக்குகளை UPI மூலமாக இணைத்து மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு எந்த வித கட்டணமும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |