ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு.. அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட நாடு!
கொரோனா வைரஸ் ஆனது, தற்போது இரண்டாவது அலை, மூன்றாவது அலை தாண்டி நான்காவது அலை வரை உலக நாடுகளில் பரவி வருகிறது. இதனால், அனைத்து நாடுகளிலும் மீண்டும் ஊரடங்கு, கட்டுப்பாடு என விதித்து வருகின்றனர். இந்த நிலையில், அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
வங்காளதேசத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,24,594- ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்வால் அந்நாட்டில் ஒருவாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வரும் 5 ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என வங்காளதேச அரசு அறிவித்துள்ளது.
இதனால், அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள தடை எதுவும் இல்லை எனவும் தொழிற்சாலைகள் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி இயங்கலாம் எனவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.