ஃப்ரண்ட்-லோட் Vs டாப்-லோட் வாஷிங் மெஷின்கள் எது சிறந்தது? சலவை தூளிலும் வேறுபாடா!
பொதுவாகவே வாஷிங் மெஷின்கள் துணித்துவைக்க சிரமப்படும் இல்லத்தரசிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையாகாது.
தற்காலத்திர் சந்தையில் பல்வேறு வகையான வாஷிங் மெஷின்கள் கிடைக்கின்றன. அவற்றில், ஃப்ரண்ட்-லோட் மற்றும் டாப்-லோட் வாஷிங் மெஷின்கள் அனைவராலும் அறியப்பட்டவை.

இந்த இரண்டு வாஷிங் மெஷின்களுக்கு இடையில் இருக்கும் வித்தியாசம் என்ன மற்றும், இவற்ளுன் எது சிறந்தது என்ற கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் பெரும்பாலான மக்கள் மத்தியில் நிழவுகின்றது.
மேலும் இவற்றிற்கு பயன்படுத்தும் சலவை தூள்களிலும் கூட வித்தியாசம் காணப்படுகின்றது. எது தொடர்பான விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஃப்ரண்ட்-லோட் Vs டாப்-லோட்
ஃப்ரண்ட்-லோட் மற்றும் டாப்-லோட் வாஷிங் மெஷின்களில் எந்த வகை வாஷிங் மெஷின் உங்களின் தேவைக்கு சரியாக பொருந்தும் என்பதை கண்டறிய இந்த இரண்டு வகை வாஷிங் மெஷின்களுக்கு இடையிலான வேறுபாடுகள் மற்றும் நன்மை தீமைபகள் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
டாப்-லோட் வாஷிங் மெஷின்கள்

டாப்-லோட் வாஷிங் மெஷின்கள், எளிதான பயன்பாடு மற்றும் குறைந்த விலை காரணமாக பெரும்பாலானவர்களால் அதிகம் விரும்ப்படுகின்றது. இந்த வகை வாஷிங் மெஷின்களில் , துணிகளை மேலிருந்து போடலாம் மற்றும் எடுக்கலாம்.
இந்த இயந்திரங்கள் பொதுவாக அதிகமான நீரைப் பயன்படுத்துகின்றன. ஆனால் துணி துவைக்கும் சுழற்சி வேகமாக இடம்பெரும். அதற்கு பயன்படுத்தும் சலவை தூள் நுரை அதிகம் வரும் வகையில் தயாரிக்கப்படுகின்றது.

ஆனால் டாப்-லோட் மெஷின்கள் சில சமயங்களில் துணிகளைச் சுருக்குவதற்கும் பொலிவிழப்பதற்கும் காரணமாக இருக்கும்.
காரணம் இது மிகவும் வேகமாக துணிகளை துவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஆனால் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.
ஃப்ரண்ட்-லோட் வாஷிங் மெஷின்கள்

ஃப்ரண்ட்-லோட் வாஷிங் மெஷின்கள், டாப்-லோட் மெஷின்களை விட மெதுவாகவும் திறன்படவும் துணிகளை துவைக்கும். இவை குறைந்த நீரைப் பயன்படுத்துவதுடன் மின்சாரத்தையும் சேமிக்கும்.
அந்த வாஷிங் மெஷின்களுக்கு பயன்படுத்தும் சலவை தூள்கள் நுரை குறைவாக வரும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. ஃப்ரண்ட்-லோட் மெஷின்கள் பொதுவாக அதிக விலை கொண்டவை, ஆனால் அவை நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்கும்.
மற்றும் துணிகளை கைகளில் துவைப்பது போல் சிறிய கறைகளையும் சுத்தமாக சலவை செய்யும் ஆற்றல் கொண்டது.

குறிப்பு : ஃப்ரண்ட்-லோட் மெஷின்களில், துணிகள் தண்ணீரில் நன்கு ஊறி, பின்னர் சுழற்றப்படுகின்றன. இதனால் அழுக்குகள் முழுமையாக நீங்குவுதுடன் துணிகளின் பொலிவும் பாதிக்கப்படாது.
ஆனால் டாப்-லோட் மெஷின்களில், துணிகள் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு, பின்னர் ஒரு சுழற்சி முறையில் சலவை செய்யப்படுகின்றது. இந்த முறை ஃப்ரண்ட்-லோட் மெஷின்களைப் போல் அழுக்குகளை முழுமையாக நீக்காமல் இருக்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |