குடிப்போதையில் ஆண்குறியை பெரிதாக்க இரண்டு நண்பர்கள் செய்த விபரீத செயல்! அதிர்ந்துபோன மருத்துவர்கள்
குடிப்போதையில் இரண்டு நண்பர்கள் ஆண் குறியை பெரிதாக்க தவறான மருந்தை பயன்படுத்தி சிக்கலில் மாட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு நண்பர்கள் குடிப்போதையில், ஒரு யூட்யூப் வீடியோவ கண்டுள்ளனர். அதில் ஆண்குறியை பெரியதாக்க உதவிக்குறிப்புகள் வந்துள்ளது.
அந்த குறிப்பிட்ட வீடியோவில் 30 வயதுகுட்பட்ட ஆண்கள் ஆண்குறி வளர ஹீமோடாமா எதிர்ப்பு க்ரீம்மை (hematoma cream) செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது.
இந்த மருந்தானது பைல்ஸ்க்கு பயன்படுத்தம் மருந்தாகுமாம். உடனே அந்த மருந்தை வாங்கி அந்த இளைஞர்கள் ஒருவருக்கொருவர் பரிசோதனை செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
அப்போது இருவரின் பரிசோதனை முயற்சி, விபரீதத்தில் முடிந்ததுள்ளது. உடனே மருத்துவரை அணுகிய அவர்கள், சிகிச்சையளித்த மருத்துவர்கள், இரவில் ஆண்குறியில் இவர்களுக்கு வீக்கம் ஏற்பட்டதாகவும், அதனால் அவர்கள் மறுநாள் மருத்துவமனைக்கு வந்ததாகவும் விளக்கினார்.
மேலும், அந்த இளைஞர்கள் ஆண்குறியை தொட்டபோது அவர்கள் மிகுந்த வலி உணர்ந்ததாக மருத்துவர்களிடம் கூறியுள்ளனர்.
ஆண்குறியில் நிணநீர் நாளங்களில் தடுப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் முடிவு செய்தனர். இதனால், இந்த வீக்கத்திற்கு சிகிச்சையளிக்க இவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனாலும், அவர்களது ஆண் குறிகள் பழைய நிலைக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து, ப்ர்மிங்காவில் உள்ள குயின் எலிசெபத் மருத்துவமனையின் ஆலோசகரும் சிறுநீரக மருத்துவரும் ஆன டாக்டர் ரிச் வைனி கூறும்போது, “இந்த கதையை பொறுத்தவரை அதிகமான ஆல்கஹால் காரணமாக அவர்கள் இந்த தவறை செய்துள்ளனர்.
யூட்யூப்பின் வழிக்காட்டுதலின் கீழ் அவர்கள் தேவையற்ற ஒரு மருந்தை ஆண்குறியில் செலுத்தி உள்ளனர். இனி ஒருபோதும் அவர்களது ஆண் குறியானது சிறப்பாக செயல்பட போவதில்லை.
அவற்றின் விறைப்புத்தன்மையில் மிகப்பெரிய சேதம் ஏற்பட கூடிய வாய்ப்புகள் உள்ளன. இதுவரை யாரும் செய்யாத ஒரு விஷயத்தை இவர்கள் செய்துள்ளனர்.
சமீப காலங்களில் ஆண்குறியின் அளவை பெரிதாக்க வேண்டும் என ஆண்கள் நினைப்பது அதிகமாகி வருகிறது.
மேலும், இந்த மாதிரியான ஆன்லைன் வீடியோக்களை பார்த்து மருத்துவ விஷயங்களை கையாள்வது ஆபத்தையே ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.