நண்பனை துரத்தி வந்த முதலை... காப்பாற்ற நபர் செய்த துணிச்சலான காரியம்
துரத்தும் முதலையிடமிருந்து தப்பிக்க இரண்டு நபர்கள் போராடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக விலங்குகள் ஒன்றை ஒன்று அடித்து சாப்பிடுவது தான் வழக்கம். அதிலும் தண்ணீரில் வாழும் விலங்குகளில் ஒன்றான முதலை, சில தருணங்களில் கரைக்கு வந்து உணவுகளை வேட்டையாடவும் செய்கின்றது.
பெரும்பாலும் முதலைகள் விலங்குகளையே வேட்டையாடி சாப்பிடுகின்றது. சில தருணங்களில் எதிர்பாராத விதமாக மனிதர்களும் உணவாகிவிடுகின்றனர்.
அப்படியொரு அதிர்ச்சி காட்சியே இதுவாகும். இருவர் நீருக்கும் இருந்த நிலையில், முதலை விரட்டுவதை அறிந்த ஒருவர் விரைவில் கரையேறியுள்ளார்.
மற்றொருவர் கரையேற தாமதமான நிலையில், குறித்த முதலையும் மிக அருகில் வந்துள்ளது. உடனே கரை ஏறிய நபர் உடனே சுதாரித்துக் கொண்டு மீண்டும் முதலை இருக்கும் இடமான தண்ணீரில் விழுந்து, முதலயிடமிருந்து காப்பாற்றும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Dropkicking At An Aligator To Help A Friend. Friendship goalspic.twitter.com/ojtoSSlUeU
— Laughing Legends (@LaughingLegend0) November 9, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |