Fried Rice சாப்பிட்ட குழந்தைகள் திடீர் மரணம்: பேரதிர்ச்சியில் பெற்றோர்
தமிழகத்தில் Fried Rice சாப்பிட்டு விட்டு படுத்த குழந்தைகள் காலையில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தை பூர்விகமாக கொண்டவர்கள் சந்தோஷ்- ஆர்த்தி தம்பதியினர், இவர்களுக்கு 7 மற்றும் 5 வயதில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.
திருப்பூரில் குடும்பத்துடன் வசிக்கும் சந்தோஷ் அருகிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார், இரவு பணி முடிந்து வரும்பொழுது குழந்தைகளுக்கு Fried Rice கொண்டு வருவது வழக்கம். இதேபோன்று சம்பவதினத்தன்றும் Fried Rice கொண்டு வந்ததுடன், தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை எழுப்பி சாப்பாடு ஊட்டி விட்டு உறங்க வைத்துள்ளார்.
மறுநாள் காலையில் எழுந்த போது, குழந்தைகள் அசைவற்று கிடந்துள்ளனர், இதனால் அதிர்ச்சியடைந்த சந்தோஷ் குழந்தைகளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார், அங்கே அவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளின் உயிரிழப்புக்கு Fried Rice காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.