அடிக்கடி ஏப்பம் வருதா? கட்டாயம் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க
நாம் ஒவ்வொரு தடவை சாப்பிடும் பொழுதும் உணவுடன் சேர்த்து சிறிதளவு காற்றையும் விழுங்குகின்றோம். அதை இரைப்பை வெளியேற்றும் செயற்பாடே ஏப்பம் ஆகும். ஏப்பம் வருவது இயல்புதான்.
ஆனால், அடிக்கடி வரும் ஏப்பம், நமக்கும் எரிச்சலைக் கொடுக்கும். பிறருக்கும் முகச் சுளிப்பை ஏற்படுத்தும்.
அவசர அவசரமாக உணவு உண்ணுதல், தண்ணீர் குடித்தல் போன்ற காரணங்களுக்காகவும் குளிர்பானங்கள் பருகும்போதும் இரைப்பையில் உருவாகும் ஒருவித அமிலத்தன்மை அதிகமாகி அது நெஞ்செரிச்சலுடனான புளிப்பான ஏப்பமாக உண்டாகும்.
ஏப்பத்தைக் கட்டுப்படுத்துவதற்கான உணவுகள்
சிறிதளவு பெருங்காயத்தை சூடான நீரில் கலந்து உணவு உண்பதற்கு முன்பு குடித்தால் ஏப்பம் தொடர்பான பிரச்சினைகள் குணமாகும்.
வெள்ளைப் பூண்டை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது வாயுத் தொடர்பான கோளாறுகளை நீக்கிவிடும்.
ஏலக்காய் டீ குடிப்பது செரிமானத்தை துரிதப்படுத்தும். கொதிக்கும் நீரில் புதினா இலைகளைப் போட்டு நன்றாக கொதிக்க வைத்ததன் பின்னர் நாட்டுச் சர்க்கரை கலந்து குடிக்கலாம்.
சீரகம், சோம்பு, இஞ்சி, கீரை வகைகள் என்பவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பப்பாளி, எலுமிச்சை, ஒரேஞ்ச் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் ஏப்பம் வருவது குறைவு.