பிரான்ஸ் நாட்டு அதிபரை அறைந்த நபருக்கு.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை!
கடந்த நாட்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை பொது இடத்தில் கன்னத்தில் அறைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், பிரான்ஸ் நாட்டுல் கொரோனா பரவல் காரணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, தன்னை வரவேற்க காத்திருந்த பொதுமக்களை சந்தித்து கை குலுக்க மேக்ரான் அவர்கள் அருகே சென்றார்.
அப்போது கூட்டத்தில் முன்வரிசையில் நின்றிருந்த ஒருவருக்கு அதிபர் கை கொடுத்த நிலையில், அந்த நபர் யாரும் எதிர்பாராத விதமாக தனது கையால், அதிபரின் ஒரு கையை பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் திடீரென மேக்ரான் கன்னத்தில் பளார் என அறைந்தார்.
உடனே பாதுகாவலர்கள் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அதன்பின்னர் அந்த இளைஞர் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய மஞ்சள் ஜாக்கெட் குழுவினரை சேர்ந்தவரா? என விசாரணையை தொடர்ந்தனர்.
மேலும், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட அவருக்கு, 18 மாதங்கள் சிறைதண்டனையை விதித்துள்ளது. இதில், 4 மாதங்கள் சிறையிலும், 14 மாதங்கள் சட்ட காவல் கண்காணிப்பிலும் கழிக்க வேண்டும்.
மேலும், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இவர் மீதான கண்காணிப்பு தொடரும் எனவும், அதற்குள் வேறு ஏதேனும் குற்றம் செய்தால், வாழ்நாள் முழுக்க சிறையில் கழிக்க நேரிடும் எனவும் அறிவித்துள்ளது....