சுரைக்காயுடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்! ஆரோக்கியத்தை சீர்குலைக்குமா?
பொதுவாக சந்தைகளில் எளிதாக கிடைக்கக்கூடிய மரக்கறிகளில் சுரக்காயும் ஒன்று.இந்த காய்கறியில் வைட்டமின்கள், கால்சியம் மெக்னீசியம், இரும்புச்சத்து துத்தநாகம், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாகவே உள்ளது.
இவை அனைத்தும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமாகும். இதை வைத்து கூட்டு குழம்பு சட்டினி தோசை என விதவிதமான உணவு வகைகளை செய்யலாம். சுரைக்காயில் இருக்கும் சத்துக்கள் தோல் மற்றும் வளர்ச்சியின் மாற்றத்திற்கு மிகவும் நன்மை தரும்.
இத்தனை நன்மைகள் இந்த சுரக்காயில் இருந்தாலும் இதை குறிப்பிட்ட ஐந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட கூடாது. அது எந்த உணவுகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சுரைக்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்
முட்டைகோஸ்: முட்டைக்கோஸ் மற்றும் சுரைக்காய் இந்த ரெண்டு கலவையையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடக்கூடாது. இது இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது வயிற்றில் வாயு பிரச்சனை ஏற்படும். மிகவும் முக்கியமாக வயிற்றில் பிரச்சனை இருப்பவர்கள் இது இரண்டையும் ஒருபோதும் சேர்த்து சாப்பிட கூடாது.
பிரக்கோலி: சுரைக்காயுடன் பிரக்கோலி சாப்பிடால், வாந்தி, மூக்கு ஒழுகுதல் மற்றும் தலை சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் எனவே இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
புளிப்பு உணவுகள்: சரக்காய் ஒரு வித்தியாசமான சுவை கொண்டது. இதனுடன் நாம் மற்றைய சுவைகளையும் சேர்க்கும் போது தான் இதன் சுவை வெளிப்படும். இந்த வகையில் பார்த்தால் சுரக்காயுடன் புளிப்பு உணவுகள் சேர்த்து சாப்பிட கூடாது. மீறி சாப்பிட்டால் வயிற்று பிரச்சனைகளை இது ஏற்படுத்தும்.
பீட்ரூட்: பீட்ரூட்டில் பல சத்துக்கள் காணப்படுகின்றது. இதையும் சுரக்காயையும் சேர்த்து சாப்பிட கூடாது. இது இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் சரும பிரச்சனைகள் ஏற்படுவதோடு முகத்தில் வெடிப்புக்கள் உண்டாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |