பாதாமுடன் இந்த உணவுகளை சாப்பிடுறீங்களா? அப்போ இந்த ஆபத்து வரும்
பாதாமில்பல உட்டச்சத்துக்கள் அதிகம் உளளன. இதை தோலுடன் சாப்பிட்டாலும் சரி, தோலில்லாமல் சாப்பிட்டாலும் சரி, பாதாமில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன.
இது இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எடை அதிகரிப்பைத் தடுக்கவும் உதவுகின்றன. ஆனால் பாதாம் சாப்பிடும்போது, நீங்கள் அதை எதனுடன் சாப்பிடுகிறீர்கள் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பாதாமுடன் சில தவறான பொருட்களை உட்கொள்வதும் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பாதாமுடன் சாப்பிட கூடாத பொருட்கள்
சிட்ரஸ் பழங்கள் பாதாம் மற்றும் ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களை ஒன்றாக சாப்பிட கூடாது. காரணம் சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலத்தன்மை பாதாமின் செரிமானத்தை மெதுவாக்கி, வீக்கம், வாயு மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும்.
பால் பொருட்கள் பால் பொருட்களுடன் பாதாம் சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பதாமுடன் கொட்டைகள் மற்றும் பால் பொருட்களை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது சளி உற்பத்தியை அதிகரிக்கும் இதனால் சளி நெரிசல் வரும்.
பதப்படுத்தப்பட்ட சிற்றுண்டிகள் சிப்ஸ் போன்ற அதிக சோடியம் பதப்படுத்தப்பட்ட சிற்றுண்டிகளுடன் பாதாமுடன் சேர்த்து சாப்பிட்டால் அது முற்று முழுதாக பாதாமின் நன்மைகளை முறிக்கும்.
அதிகப்படியான உப்பு உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம், வீக்கம் மற்றும் நீர் தேக்கத்தை ஏற்படுத்தும். பதப்படுத்தப்பட்ட சிற்றுண்டிகளில் பாதுகாப்புகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உள்ளன. அவை பாதாமின் ஊட்டச்சத்து நன்மைகளைக் குறைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |