அடிக்கடி பயணம் செய்ய விரும்புவரா நீங்கள்? அப்போ பயணத்திற்கு முன் கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது!
By Rinosharai
பொதுவாகவே நம்மில் சிலர் பயணம் செய்தென்றால் முதல் ஆளாக தயாராகி விடுவார்கள். அவர்களுக்கு நீண்ட தூரம் பயணம் செய்வதென்றால் மிகவும் பிடித்த விடயமாக இருக்கும்.
அவ்வாறு பயணம் செய்பவர்கள் தங்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களை தயார் செய்துக் கொண்டு தீவிராமாக தயார் ஆவார்கள்.
அதுபோல பயணத்திற்கு முன் உணவு விடயங்களிலும் தயாரக இருப்பார்களா என்பது சிந்திக்க வேண்டிய விடயம் தான். இவ்வாறு நீங்கள் பயணத்திற்கு தயாராகி விட்டால் இந்த உணவுகளை எல்லாம் நீங்கள் சாப்பிட கூடாது என்று ஒரு வரைமுறை உள்ளது.
பயணத்தின் போது சாப்பிட கூடாத உணவுகள்
- நீண்ட தூரம் ரயிலில் பயணம் செய்வதானால் கடினமான உணவுகளை சாப்பிடக் கூடாது.
- விமானத்தில் பயணத்தின் போது அதிகமாக சாப்பிடக்கூடாது அவ்வாறு சாப்பிட்டால் விமானம் பறக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்படும்.
- நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் சீஸ் நிரப்பப்பட்ட உணவு வகைகளை சாப்பிட்டால் வாயு பிரச்சினை உருவாகும்.
- துரித உணவுகளை உட்கொண்டால் இரைப்பை பிரச்சனை மற்றும் உடல் எடையை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- சோடா மற்றும் குளிர் பானங்கள் போன்ற கார்பனேற்றப்பட்ட பானங்கள் இரைப்பை பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, வாய் துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.
- செயற்கை இனிப்புகள் உங்கள் பற்களுக்கு தீங்கு விளைவிக்கும் மேலும், சுயிங்கங்கள் சாப்பிடும் போது காற்று வாயிற்குள் சென்று வாயு பிரச்சினையை ஏற்படுத்தும்.
- காரமான உணவுகளை சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படும்.
- மாச்சத்து நிறைந்த உணவகளை உண்ணும் போது வீக்கம் மற்றும் வாயு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
- மதுபானங்களை அருந்தி விட்டு பயணிக்கும் போது அது வீக்கத்தை ஏற்படுத்தும்
ஆகவே நீங்கள் பயணம் செய்யும் வேளைகளில் இவ்வாறான உணவுகளை விடுத்து ஆரோக்கியமான உணவுகளையும் பழங்களையும் எடுத்துக் கொண்டால் இனிமையான பயணங்ளை மேற்கொள்ளலாம்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US