ஆண்களை மலட்டுதன்மைக்கு ஆளாக்கும் சில பழக்கங்கள்! கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க..
இன்று இருக்கும் கலியுகத்தில் வாழ்க்கை முறையை பொருத்தமட்டில் ஆண்கள் அதிகமான மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அத்துடன் அவர்கள் எடுத்து கொள்ளும் துரித உணவுகள், உடற்பயிற்சி இன்மை, டயட் உள்ளிட்ட காரணங்கள் ஒன்றினைந்து ஆண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் அதிகம் வருகின்றன.
இவ்வாறு பிரச்சினைகள் இருந்தாலும் சுய கௌரவத்தை மனதில் வைத்து கொண்டு சிலரால் இதனை வெளியில் கூற முடியாது.
இதனால் ஆரோக்கியமான குழந்தைகள், குழந்தையின்மை, கர்த்தரிப்பதற்கு அதிகமான நாட்கள், மலட்டுதன்மை ஆகிய பிரச்சினைகள் வருகின்றன.
அந்த வகையில் ஆண்களிடம் இருக்கும் பாலியல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் சில உணவுகள் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
விந்தணுக்களை குறைக்கும் சில பழக்கங்கள்
1. பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள்
வியாபார நிலையங்களில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள் வைக்கப்பட்டிருக்கும் இந்த இறைச்சிகளை ஆண்களுக்கு அளவிற்கு அதிகமாக கொடுக்கக் கூடாது.
மேலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையையும் தரத்தையும் குறைக்கும். இதனால் அவர்கள் காய்கறிகளை அதிகமாக எடுத்து கொள்வது சிறந்தது. பதப்படுத்தப்படாத இறைச்சிகளை எடுத்து கொள்வது இதெல்லாம் விட சிறந்தது.
2. இனிப்பு வகைகள்
இனிப்பு வகைகள் சாப்பிடுவதால் ஆண்கள் காலப்போக்கில் மலட்டுதன்மை அடைவார்கள். மேலும் ஆண்களுக்கு வரும் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும். வேறு வேறு நோய்களை இது ஏற்படுத்துகின்றது.
3. அதிக உப்பு உள்ள உணவு பொருட்கள்
அதிக உப்பு கலந்த உணவுகள் ஆண்களின் மலட்டுத்தன்மையை காலப்போக்கில் அதிகரிக்கும். ஏனெனின் இந்த உணவுகளில் சோடியம் அதிகம் இருக்கும். உதாரணமாக பீட்சா, பர்கர், நூடுல்ஸ் இது போன்ற சில உணவுகள்.
4. புகைபிடித்தல்
சில ஆண்கள் தொடர்ச்சியாக புகைத்தலில் ஈடுபடுவார்கள். இதனால் அவர்கள் பிற்காலத்தில் மலட்டுத்தன்மையை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆண்களின் விந்தணுக்கள் புகைத்தலினால் குறைவடைந்து அதன் தரமும் சற்று குறைவடையும். அத்துடன் நுரையீரலும் அதிகமாக பாதிக்கப்படுகின்றது.
5. மதுப்பழக்கம்
ஆண்களுக்கு இருக்கக் கூடாத பழக்கம் என்றால் இந்த பழக்கம் தான். விந்தணுக்கள் மட்டுமல்ல உடலிலுள்ள அனைத்து பாகங்களை பிரச்சினை ஏற்படுத்தும். மனம் சார்ந்த பிரச்சினைகளையும் அதிகப்படுத்தும்.
இதனால் அவர்களின் திருமண வாழ்க்கை காலப்போக்கில் பாதிக்கின்றது. அத்துடன் விறைப்புத்தன்மை பிரச்சனை, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு, மோசமான விந்தணுக்களின் தரம் ஆகிய விளைவுகளை சந்திக்க வேண்டி உள்ளது.