இந்த உணவை உண்பதாலும் உடலில் ரத்த சோகை ஏற்படும் என்ன உணவு?
உடலில் இரும்புச்சத்தானது ஒவ்வொருவருக்குமே சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம் ஹீமோகுளோபின் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது, இதன் காரணமாக தோலில் லேசாக சிவந்த தன்மை இருக்கும்.
ஆனால் உடலில் தொடர்ந்து இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், ஹீமோகுளோபின் அளவு சாதாரண அளவை விட குறையத் தொடங்குகிறது.
இதுவே இரத்த சோகை எனப்படும். இந்த ரத்த சோகை சில உணவு பழக்க வழக்கத்ததாலும் ஏற்படுகின்றது. அது என்னென்ன உணவுகள் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இரத்த சோகை கொடுக்கும் உணவு பழக்க வழக்கம்
பால் பொருட்கள்: பாலில் அதிகமாக கல்சியம் உள்ளது. இந்த பால் பொருட்களை அதிகளவில் உட்கொண்டால் உடலில் இருக்கும் இரும்புச்சத்தை அது உறிஞ்சி எடுக்கும். எனவே அதிகளவிலான பால் பொருட்களை இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் உண்ண கூடாது.
டீ மற்றும் காபி : அதிக அளவு டீ மற்றும் காபி உட்கொள்வது இரும்பு சத்து குறைபாட்டில் இன்னும் மோசமாக்கும். இதை அதிகளவில் எடுத்துக்கொள்ளும் போது உடல் இரும்புச்சத்தை இழக்க நேரிடும். இது படிப்படியாக உடலில் இரும்புச்சத்தை குறைக்கும்.
மது: மது அருந்துவதால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது மட்டுமின்றி பல பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். மது அருந்துவதால், நம் உடலுக்கு உணவின் மூலம் கிடைக்கும் இரும்புச்சத்தை குறைக்கும்.
உடலில் இரும்புச்சத்து குறைபாடு, சோர்வு, பலவீனம், வெளிர் தோல், சுவாசிப்பதில் சிரமம், மயக்கம், தலைவலி, அதிகரித்த இதய துடிப்பு, மார்பு வலி, குளிர் கை மற்றும் கால்கள், முடி உதிர்தல், உங்கள் வாயின் மூலைகளில் வீக்கம் தொண்டை புண் மற்றும் வீங்கிய நாக்கு போன்ற அறிகுறிகள் காணப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |