ரவை இருக்கா? மொறு மொறு ஸ்நாக்ஸ் ரெடி!
மாலையில் சூடாக சாப்பிட வேண்டும்.
ஆனாலும் அதிகமாக மெனக்கெடாமல் அருமைனா ஸ்நாக்ஸ் செய்ய வேண்டுமெனில் இந்த ரவை போண்டா உங்களுக்கு உதவலாம்.
ரெசிபி இதோ
தேவையான பொருட்கள்
- ரவை - 1 கப்
- சர்க்கரை - 1/2 கப்
- முட்டை - 3
- எண்ணெய் - 1
- ஏலக்காய் - 3
செய்முறை
முதலில் ரவையை வானலியில் போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளுங்கள்.
அதன்பிறகு மூன்று முட்டைகளை உடைத்து அதை நன்கு அடித்துக்கொள்ளுங்கள்.
அதிலேயே சர்க்கரை மற்றும் ஏலக்காய் தட்டிப்போட்டு சர்க்கரை கரையும்வரை மீண்டும் கலக்குங்கள்.
கலந்ததும் வறுத்த ரவையை சேர்த்து கட்டிகளின்றி நன்றாக கலக்குங்கள். மொத்தமாக கொட்டிக் கலக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்குங்கள். அப்போது கட்டிக்கட்டியாக இல்லாமல் மிருதுவான தன்மை கிடைக்கும்.
மாவு கெட்டிப்பதத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் உருண்டைகள் வரும். தற்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய வையுங்கள். காய்ந்ததும் கலக்கிய மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருண்டைகளாக எண்ணெயில் விடுங்கள்.
அவை பந்து போல் மேலே வரும். பின் இருபுறமும் சிவக்க வறுத்ததும் வெளியே எடுத்துவிடுங்கள். அவ்வளவுதான் ரவை இனிப்பு போண்டா தயார்.