Sri Lankan Prawn Curry: நாவூறும் சுவையில் இலங்கையின் இறால் மசாலா கறி
பொதுவாக இலங்கையில் செய்யப்படும் கறி வகைகள் காரசாரமா இருக்கும். இந்த முறை ரெசிபிகள் எந்த நாட்டிலும் பின்பற்றுவதில்லை. இறால் எல்லா நாட்டிலும் ஒவ்வொரு வகையாக செய்வார்கள்.
அவற்றில் சுவையை அறிஜந்து பார்க்க யாருக்கு தான் ஆசை இருக்காது. இந்த பதிவில் இலங்கையில் செய்யப்படும் இறால் கறி செய்முறை எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
செய்யும் முறை
முதலில் சுத்தம் செய்த இறாலுக்கு மஞ்சள், உப்பு, மிளகு, போட்டு மிக்ஸ் செய்து தனியே எடுத்து வைக்க வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் கறிவேப்பிலை, ரம்பை, வெந்தயம், பட்டை, கடுகு போட்டு தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயம், இஞசி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின்னர் கறி பொடி, மிளகாய் பொடி போட்டு வதக்க வேண்டும். இதனுடன் தக்காளிளையும் சிறிதாக நறுக்கி சேர்க்க வேண்டும்.
இவை நன்றாக வதங்கியதும் கலந்து வைத்த இறாலை சேர்க்க வேண்டும். இதனுடன் பச்ச மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். இறால் நன்றாக வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
இதை 4 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பின்னர் இறுதியாக எலுமிச்சை சாறு பிளிந்து விட்டு இறக்கினால் சுவையான இறால் கறி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |