விமான பணிப்பெண்கள் கையை பின்னால் மறைத்து வைத்திருப்பது ஏன் தெரியுமா?
பயணங்களில் அதிக செலவு மிக்கதும், விரைவானதுமான விமான சேவையில், பயணிகளின் சௌகரியகத்துக்காக அவர்களுக்கு தேவையான செய்து கொடுப்பவர்கள் விமான பணிப்பெண்கள்.
இந்த வேலையில் அதிகளவு சம்பளம் கிடைத்தாலும், சற்று சவாலான பணியாகவே அமையும் என்பது மறுப்பதற்கில்லை.
விமானம் புறப்படும் ஒரு மணிநேரத்துக்கு முன்பாகவே விமானத்தின் பயண நேரம், உணவு சேவை, அவசர கால தேவைகள், பருவநிலை சூழல்கள் மற்றும் வேறுசில முக்கிய விஷயஙகள் பற்றிய வழிகாட்டுதல்கள் விமான பணிப்பெண்களுக்கு கற்றுக்கொடுக்கப்படும்.
இதை அவர்கள் புரிந்து கொண்டு பயணிகளை வழிநடத்தினால் மட்டுமே அவர்களது பயணம் சிறப்பானதாக அமையும்.
அப்படி விமானத்தில் பயணிக்கம் பணிப்பெண்கள் கைகளை பின்னால் மறைத்து வைத்திருப்பதை கவனித்திருக்கிறீர்களா?
அது ஏன் என்று என்றாவது சிந்தித்தது உண்டா? இதற்கு காரணம் விமான பணிப்பெண்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் அதுவும் ஒன்று.
அதாவது, விமானத்தில் எத்தனை பயணிகள் ஏறியுள்ளனர் என்பதை கணக்கெடுப்பதற்காக பணிப்பெண்கள் கவுன்ட்டர் ஒன்றை பயன்படுத்துகின்றனர்.
ஸ்கேன் செய்யப்பட்ட டிக்கெட்களின் எண்ணிக்கையுடன் பயணிகளின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்பதை ஒப்பிட்டு பார்க்க கவுன்டர் மூலம் கணக்கெடுக்கின்றனர்.
இதனால் தான் கைகளை பின்னால் மறைத்தபடி விமானத்தில் பணிப்பெண்கள் நடக்கின்றனர்.
ஒவ்வொரு பயணி புதிதாக விமானத்தில் ஏறும்போதும், அவர்கள் இந்த கவுன்டரை ஒரு முறை 'க்ளிக்' செய்து கொள்வார்கள்.