உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? ஆளி விதை செய்யும் அற்புதம்
உடல் எடையைக் குறைப்பதற்கு பலரும் பல வித யுக்திகளைக் கையாளும் நிலையில்,ஆளி விதைகள் பல பயன்களை அளிக்கின்றது.
ஆளிவிதைகள் ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்டதுடன், உடலை குளிர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகின்றது.
ஆளி விதையில் இருக்கும் முழு நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஆளி விதையின் நன்மைகள் என்ன?
நார்ச்சத்து நிறைந்த ஆளி விதைகள் செரிமான மண்டலத்தை பாதுகாக்கின்றது.
இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதால், இதய ஆரோக்கியத்திற்கும், கொழுப்பினை குறைக்கவும் உதவி செய்கின்றது.
எடையைக் குறைக்க நினைப்பவர்கள் ஆளி விதையினை சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். வெறும் 100 கிராம் விதையில், 18 கிராம் புரதம் காணப்படுவதுடன், தசைகளை உருவாக்குவதுடன், பசியை அடக்கவும் செய்கின்றது.
ஆனால் ஆளி விதைகளை அதிகமாக சாப்பிடவும் கூடாது என்பதையும் தெரிந்து கொண்டுங்கள்... அதாவது இரண்டு வகையான ஆளி விதைகள் இருக்கும் நிலையில், தினமும் 2 ஸ்பூன் அளவிற்கு மட்டுமே இதனை எடுத்துக்கொள்ளவும்.
பச்சையாக சாப்பிடுவதை விட வறுத்து சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். வறுத்து பொடி செய்த ஆளி விதையினை தயிர் மற்றும் கல் உப்பு கலந்து சாப்பிடவும்.
ஆளி விதையை யார் சாப்பிடக்கூடாது?
குறைந்த ரத்த அழுத்தம், குறைந்த ரத்த சர்க்கரை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, ஹார்மோன் பிரச்னைகள், ரத்தப்போக்கு பிரச்னைகள் உள்ளவர்கள் இந்த விதைகளை உட்கொள்ளும்போது கவனம் தேவை.