எச்சரிக்கை....முகத்திற்கு மஞ்சளை பயன்படுத்தும் முன் கட்டாயம் இத படிங்க! இல்லை ஆபத்து?
காலம் காலமாக மஞ்சள் ஒரு அழகுப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மஞ்சளின் மருத்துவ குணத்தால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சரும ஆரோக்கியமும் மேம்படும்.
ஆனால் இந்த மஞ்சளை தவறான முறையில் பயன்படுத்தினால் சரும பிரச்சனைகள் குறைவதற்கு பதிலாக அதிகரிக்கும். இது குறித்து பார்க்கலாம்.
மஞ்சளைப் பயன்படுத்துபவர்களா?
முகத்திற்கு மஞ்சளைப் பயன்படுத்துபவர்கள் பலரும் முகத்தில் உள்ள மஞ்சளை நன்கு கழுவுவதில்லை.
முகத்திற்கு மஞ்சளை பயன்படுத்திய பின்னர், பலரது முகத்தில் அதிக மஞ்சளை காணலாம். முகத்தில் ஆங்காங்கு மஞ்சள் இருக்கும். இப்படியே முகத்தில் மஞ்சளை விட்டுவிட்டால், பின் அது முகத்தில் எரிச்சல் மற்றும் அரிப்புக்களை ஏற்படுத்திவிடும்.
ஆகவே முகத்திற்கு மஞ்சளை பயன்படுத்தி முகத்தைக் கழுவிய பின்னர் மறக்காமல் முகத்தில் மாய்ஸ்சுரைசரைத் தடவுங்கள்.
இந்த மஞ்சளை நீக்க பலரும் முகத்திற்கு சோப்பு அல்லது ஃபேஸ் வாஷைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இப்படி செய்தால், முகச் சருமம் கருமையாக ஆரம்பிக்கும். எனவே இம்மாதிரியான தவறை ஒருபோதும் செய்துவிடாதீர்கள்.
முகத்திற்கு பொலிவை இயற்கையாக கொண்டு வருவதற்கு மஞ்சள் ஃபேஸ் பேக் உதவி புரியும்.
ஆனால் சில பெண்கள் மஞ்சளுடன் பலவிதமான பொருட்களைக் கலந்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போடுவார்கள். இப்படி செய்வதால் முகச் சருமம் தான் அதிக சேதமடையும்.
மஞ்சள் ஃபேஸ் பேக்கை போட விரும்புபவர்கள், மஞ்சள் தூளுடன், ரோஸ் வாட்டர் மற்றும் பால் கலந்து முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம். இது நல்ல பலனைத் தரும்.
நீண்ட நேரம் மஞ்சளை ஊற வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?
பெரும்பாலான பெண்கள் முகத்திற்கு மஞ்சள் ஃபேஸ் பேக்கை போட்டுக் கொண்டு வீட்டின் பிற வேலைகளை செய்வதுண்டு.
இப்படி செய்யும் போது பல பெண்கள் ஃபேஸ் பேக்கை நீண்ட நேரம் ஊற வைப்பார்கள்.
இப்படி நீண்ட நேரம் மஞ்சள் முகத்தில் இருந்தால், அது அரிப்பு, எரிச்சல் மற்றும் மஞ்சள் கறைகளை முகத்தில் படிய வைக்கும்.
ஆகவே முகத்திற்கு மஞ்சள் ஃபேஸ் பேக் போட்டால், மஞ்சள் காயந்த உடனேயே நீரால் கழுவிட வேண்டும்.