அட்டகாசமான சுவையில் மீன் பக்கோடா.... ரொம்ப சீக்கிரம் எப்படி செய்யலாம்?
உணவுகளிலேயே மீன் அதிக சத்துமிக்கது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மீன் சாப்பிடும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள். மீனைக் கொண்டு வெறுமனே குழம்பும், பொரியலும் செய்து சாப்பிடுவதை மாற்றி சற்று வித்தியாசமாக பக்கோடா செய்தால் எப்படியிருக்கும்.
இனி மீனில் பக்கோடா எவ்வாறு செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முள் நீக்கிய மீன் துண்டுகள் - கால் கிலோ
சோள மா - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - சிறிதளவு
முட்டை - 2
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் மீன் துண்டுகளை நன்றாகக் கழுவி வேகவைத்து உதிர்த்து கொள்ளவும்.
பின்னர் அகன்ற பாத்திரமொன்றில் முட்டையை அடித்து ஊற்றி கலக்கி, அதனுடன் சோள மா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு என்பவற்றை சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
அதன்பின்பு அதில் மீன் துண்டுகளை சேர்த்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
இறுதியாக இந்த மீன் கலவையை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.