வீடே மணமணக்கும் ஸ்நாக்ஸ் பிஷ் கபாப்! எப்படி செய்றாங்க தெரியுமா?
பொதுவாக வீடுகளில் கடலுணவுகள் என்றால் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.
மேலும் கடலுணவுகள் சாப்பிடுவதால் உடலில் இருக்கும் கால்சியம், புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாகும் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதன்படி, கடலில் இருக்கும் மீன்கள் பிடித்து, அதனை கறி, கூட்டு, பொரியல், சாலட், என பல வகைகளில் தயாரிக்கலாம்.
இவ்வாறு செய்து கொடுக்கும் போது வீட்டிலுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்த வகையில் சுவையான ஸ்நாக்ஸ் பிஷ் கபாப் எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
துண்டு மீன் - அரை கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
வினிகர் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
சமைக்கும் முறை
முதலில் சுத்தம் செய்யப்பட்ட வெங்காயங்களை எடுத்து ஒரு மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும். தொடர்ந்து மீன்களையும் நன்றாக மஞ்சள் சேர்த்து கழுவி கொள்ளவும்.
மீனை கொஞ்சமாக வேக வைக்க வேண்டும் இதனால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனை கொதிக்க விட்டு, சுமார் 10 நிமிடங்கள் அடுப்பில் மீனை வைத்திருக்க வேண்டும்.
மீன் வெந்தவுடன் பாத்திரத்திலுள்ள மீன்களை எடுத்து உள்ளிருக்கும் முள் நீக்கி, அதனை நன்றாக மசித்து கொள்ளவும்.
அடுத்தப்படியாக ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, வெங்காய விழுது, உப்பு, வினிகர் மற்றும் மீன் ஆகிய பொருட்களை ஒன்று பிசைந்து உருண்டைகளாக உருட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
இதன் பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கொதித்து வரும் போது மீன்களை போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்க வேண்டும். பொரித்து இறக்கினால் சுட சுட ஸ்நாக்ஸ் பிஷ் கபாப் தயார்!