இலியானாவின் கர்ப்பத்திற்கு காரணம் இவர் தானா? அம்பலப்படுத்திய நெருக்கமான புகைப்படம் இதோ
நடிகை இலியானா திருமணமாகாமல் கர்ப்பமாக இருக்கும் நிலையில், கர்ப்பத்திற்கு யார் காரணம்? என்பது குறித்து புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
நடிகை இலியானா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இலியானா, கேடி என்ற திரைப்படததின் மூலம் அறிமுகமானார். பின்பு ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் சரியான அளவில் இவருக்கு கைகொடுக்காத நிலையில், தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றிப்படங்களை கொடுத்தார்.
கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு தி பிக் ஃபுல் என்ற படத்தில் நடித்திருந்த இலியானா தற்போது அன்ஃபெர் அன் லவ்லி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இலியானா தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் நிலையில், தற்போதும் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள், திருமணமாகாமல் கர்ப்பமாக இருக்கும் இலியானாவின் கர்ப்பத்திற்கு காரணம் அவர் நெருக்கமாக இருக்கும் இந்த நபர் தானா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
இலியானா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் குறித்த ஆணின் முகம் தெளிவாக தெரியவில்லை என்றாலும், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இவரது குழந்தை தான் என்று நம்ப வைக்கும் விதத்தில் காணப்படுகின்றது.
நெகிழ வைத்த பதிவு
மேலும் குறித்த பதில், கர்ப்பமாக இருப்பது ஆசீர்வாதம். இதனை அனுபவிக்கும் அளவிற்கு நான் அதிர்ஷ்டசாலியாக இருப்பேன் என்று நினைக்கவில்லை... தற்போது நம்பமுடியாத அதிஷ்டசாலி என்று நினைக்கிறேன்.
பெரும்பாலான நாட்களில் தனது குழந்தையின் அசைவினை பார்த்துக்கொண்டிருக்கும் நான் விரைவில் உன்னை சந்திக்கிறேன். மேலும் சில நாட்கள் கடினமானவை... தன்னை நம்பிக்கை அற்றவராக உணர்த்தும் நிலையில், நான் நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும்.
மிகவும் அற்பமான விஷயத்திற்கு அழாமல் வலுவாக இருக்க வேண்டும், தான் வலிமையாக இல்லாவிடில் எப்படிப்பட்ட தாயாக இருப்பேன் என்று தெரியாது. தனக்கு தெரிந்தது இக்குழந்தையை நான் அதிகமாக நேசிக்கின்றேன் என்பது தான்.. என்று உணர்வு பொங்க கூறியுள்ளார்.