உடலில் கல்லீரல் பாதிக்கப்பட்டால் முதலில் காட்டும் முக்கிய அறிகுறிகள் என்ன?
மது முழு உடலையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உற்பத்தி செய்வதற்கும் கல்லீரல் முக்கியமானது.
கல்லீரல் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். இது தவிர உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
உடலில் இப்படியான பெரிய பொறுப்புக்களில் இருக்கும் கல்லீரலில் ஒரு சிறிய பிரச்சனை இருந்தாலும் அது ஆபத்தை கொடுக்கும். மற்றைய உறுப்புக்கள் போல கல்லீரல் இல்லை.
இதில் சிறிய பிரச்சனைகள் வரும் போது அது தானகவே தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மக்களின் கவனக்குறைவால், கல்லீரலும் நோய்வாய்ப்பட்டு வருகிறது.
கொழுப்பு கல்லீரல் மற்றும் கல்லீரல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே கல்லீரல் சேதமடைந்தால் என்ன அறிகுறிகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கல்லீரல் பாதிப்பின் முதல் அறிகுறிகள்
குமட்டல் மற்றும் வாந்தி- கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், வாந்தி மற்றும் குமட்டல் முக்கிய அறிகுறிகளாகும். இதுவே கல்லீரல் பாதிப்பின் முதல் அறிகுறியாகும்.
இது தவிர, இரத்த வாந்தி அல்லது மலத்தில் இரத்தம் வருவதும் கல்லீரல் பாதிப்பைக் குறிக்கும். இந்த அறிகுறிகளை ஒருபோதும் நாம் புறக்கணிக்கக்கூடாது.
வயிற்று வீக்கம் - நாள்பட்ட கல்லீரல் நோய் வயிற்றில் திரவம் சேர வழிவகுக்கும். இதன் காரணமாக கல்லீரல் அல்லது வயிற்றில் வீக்கம் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில் வயிறு மிகவும் பெரிதாகத் காணப்படும். வயிறு வீக்கம் கல்லீரல் பாதிப்பின் முதல் அறிகுறியாக இருக்கலாம்.
தோல் அரிப்பு - தோல் அரிப்பு கல்லீரல் பிரச்சனைகளுடனும் தொடர்புடையது. கல்லீரல் நோய் ஏற்பட்டால் அரிப்பு பிரச்சனை அடிக்கடி அதிகரிக்கும்.
இதை இல்லாமல் செய்ய வீட்ட வைத்தியங்கள் மேற்கொள்வது நல்லது. இது தவிர பித்த நாளம் அல்லது கணையத்தில் கற்கள் இருப்பதாலும் இந்த அறிகுறி காட்டும்.
பாதங்களில் வீக்கம் - பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் இருந்தால், அது நாள்பட்ட கல்லீரல் நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
இதன் காரணமாக கால்களில் திரவம் குவிவதால் வீக்கம் ஏற்படுகிறது. எந்த காரணமும் இல்லாமல் உங்கள் கால்கள் வீங்கினால் இதற்கு முக்கிய காரணம் உங்கள் கல்லீரல் நோய் தான்.
தூக்கமின்மை - கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும்போது, தூக்கம் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படத் தொடங்கும். கல்லீரல் நோய்வாய்ப்படும்போது, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற முடியாது.
இதன் காரணமாக தூக்க சுழற்சியும் பாதிக்கப்படுகிறது. கல்லீரல் சிரோசிஸ் ஏற்பட்டால், தூக்கம் தொந்தரவு செய்யப்பட்டு, பகலில் தூக்கம் வர ஆரம்பிக்கும். எனவே இதுபோன்ற அறிகுறிகளை புரக்கணிக்காமல் நடவெடிக்கை எடுப்பது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |