2026-ன் முதல் சூரிய கிரகணம் - மூன்று ராசிகள் இதையெல்லாம் இழக்க நேரிடும்
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இடம்பெற உள்ளது. இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு வாழ்க்கையில் எதிர்பாராத சில கஷ்டங்கள் வரலாம் எனப்படுகின்றது.
பிப்ரவரியில் முதல் சூரிய கிரகணம்
2026-ன் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17-ல் நிகழ்கிறது. சூரிய கிரகணம் என்பது சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் பொழுது ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வாகும்.
இதன்போது நமது பெரியவர்கள் வெளியில் செல்ல கூடாது சாப்பிட கூடாது என பலவற்றை சொல்வார்கள். ஆனால் ஜோதிடப்படி சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சொல்லப்படும்.
இந்த சூரிய கிரகணம் சூரியனும், ராகுவும் இணைவதால் உருவாகிறது. இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என கூறப்படுகின்றது. அந்த ராசிகள் பற்றி பார்க்கலாம்.

கடகம்
- கடக ராசிக்காரர்களுக்கு 8ம் வீட்டில் கிரகண யோகம் உருவாகிறது. ஜோதிடத்தில் அஷ்டம பாவம் என்பது ஆயுள், விபத்து, தடங்கல்கள், அவமானம், நீண்டகால நோய்கள் மற்றும் ரகசியமான விஷயங்களைச் காட்டும் ஒரு இடமாகும்.
- கடக ராசிக்காரர்களுக்கு இந்த வீட்டில் தான் சூரிய கிரகணம் உருவாகிறது. இதனால் இதய சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
- தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் வரும் வாய்ப்புக்கள் இருக்கும். இதனால் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மேலும் செலவுகள் உயர்ந்து சேமிப்புகள் குறையக்கூடும் கட்டுப்பாடாக இருப்பது நல்லது.
கன்னி
- கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியன் ராகு இணைவு காரணமாக சிரமமான சூழ்நிலை உருவாகலாம். செய்யும் பணிகளில் தடை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் உங்களுக்கு எதிராக சில எதிர்மறை நிகழ்வுகள் நடைபெறக்கூடும்.
- இதனால் வேலை தொடர்பான பாதிப்புகள், நிதி இழப்புகள் போன்றவை நேரிடலாம். சமூகத்தில் உள்ள நல்ல பெயருக்கு குந்தகம் அல்லது மரியாதை குறையும் நிலையும் உருவாகலாம்.
- சொத்து அல்லது சட்ட ஆவணங்களில் கையெழுத்திடும் முன் கூடுதல் கவனம் அவசியம். பணம் தொடர்பான விஷயங்களில் அவசர தீர்மானகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
மீனம்
- மீன ராசிக்கு கிரகண யோகம் 12ம் வீட்டில் உருவாகிறது. இந்த 12 ஆம் வீடு என்பது விரய ஸ்தானமாகும். இந்த விரய ஸ்தானம் எதிர்பாராத செலவுகள் மற்றும் நிதி இழப்புகளை குறிக்கும் இடமாகும்.
- எனவே இந்த சூரிய கிரகணம் சூரியன் மற்றும் ராகுவின் சேர்க்கை 12 ஆம் வீட்டில் நிகழ்வதால் தேவையற்ற செலவுகள் அல்லது மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.
- பயணங்களால் அலைச்சல் மற்றும் உடல் சோர்வு ஏற்படக்கூடும். விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இரவு நேர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).