இந்த ஆண்டு தோன்றும் முதல் கங்கண சூரிய கிரகணம்- எப்படி பார்க்கலாம்?
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இது கங்கண சூரிய கிரகணமாகும். இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என்றாலும் இணையதளங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்வதை பார்த்து ரசிக்கலாம்.
மேலும், பொதுவாக அமாவாசை நாட்களில் தான் சூரிய கிரகணம் ஏற்படும். இன்றைய தினம் சூரியன், சந்திரன், ராகு இணைந்து ரிஷப ராசியில் பயணம் செய்கின்றன.
சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது ஏற்படுவது கிரகணம் ஆகும். இதில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிகழ்வை உலகின் சில பகுதிகளில் இருக்கும் மக்களால் மட்டுமே பார்க்க முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது மொத்தம் 3 நிமிடங்கள் 51 வினாடிகள் நீடிக்கும் என நாசா தெரிவித்துள்ளது.
இந்த சூரிய கிரகணமானது இந்திய நேரப்படி பிற்பகல் 01:42:19 மணிக்கு ஆரம்பமாகி மாலை 06:40:54 மணிக்கு சூரிய கிரகணம் முடிவடைகிறது. இதில் எந்த இடத்திலும் இந்திய பகுதிக்குள் வரவில்லை. எனவே, இந்த கிரகணம் இந்தியாவில் எந்த பகுதியிலும் எள்ளளவு கூட தெரியாது.
மேலும், கனடா, வடக்கு ரஷ்யா மற்றும் கிரீன்லாந்து ஆகிய பகுதிகளில் இருப்பவர்கள் இந்தச் சூரிய கிரகணத்தை முழுமையாகப் பார்க்க முடியும். உலகின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் சூரியனின் மேற்பரப்பில் ஒரு இருண்ட நிழலை மட்டுமே காண்பார்கள்.
இது ஒரு பகுதி கிரகணமாக இருக்கும். இந்த நாட்டில் உள்ளவர்கள் நெருப்பு வளையத்தை பார்க்க முடியாது.
ஆனால், கிழக்கு அமெரிக்கா, வடக்கு அலாஸ்கா, கனடா, கரீபியனின் சில பகுதிகள், ஐரோப்பா, ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் இந்தச் சூரிய கிரகணத்தைப் பகுதியாகப் பார்க்க முடியும்