நடிகரின் கருப்பு வெள்ளை கோட்டிற்கு தடை விதித்த நீதிமன்றம்! காரணம் என்ன?
கட்டுப்பாடற்ற கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நீதிமன்றம் நடிகரின் கருப்பு வெள்ளை கோட் சூட்டிற்கு தடை விதித்துள்ளது.

தேவ் ஆனந்த்
பாலிவுட் திரையுலகின் பல நடிகர்களின் நடிப்பு திறமை மக்களை கவரும். ஆனால் ஒரு நடிகரின் ஆடை அலங்காரம் மற்றும் ஸ்டைல், நாட்டின் சட்ட ஒழுங்குக்கே சவாலாக மாறிய சம்பவம் 1950 மற்றும் 60-களில் நிகழ்ந்தது.
இதற்கு காரணமானவர் வேறு யாருமல்ல, பாலிவுட்டின் என்றும் இளமை மாறாத "எவர்கிரீன்" காதல் மன்னன் தேவ் ஆனந்த் தான்.

இந்த நடிகர் அந்த காலத்தில் கருப்பு வெள்ளை கோட் அணிவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் அதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நடிகர் தேவ் ஆனந்த் 1946-ல் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். 1948-ல் வெளியான 'ஜித்தி' திரைப்படத்தின் மூலம் அவர் பிரசித்தி பெற்ற ஒரு நடிகராக மாறினார். இருந்தும் இவர் ஆடைக்கு நீதிமன்றம் ஏன் தடை விதித்தது என்பது பற்றி தெரியுமா?

கோட்டிற்கு தடை விதித்த நீதிமன்றம்
தேவ் ஆனந்த் வெள்ளை நிற சட்டையும், அதற்கு மேல் கருப்பு நிற கோட்டும் அணிவார்.
அந்த காலத்தில் அவரது தனித்துவமான இந்த ஆடை அலங்காரமும் தலைமுடியை கோதி விட்டு வரும் ஸ்டைலும் அக்கால இளைஞர்களிடையே மிகப்பெரிய ஃபேஷன் அலையை தூண்டி உள்ளது.
அவர் கோட் சூட் அணிந்து பொது இடத்திற்கு வந்தால் அவரின் ்ஸ்டைலை பார்க்கவே பல மக்கள் திரள்வார்கள்.
இவர் பொது இடத்தில் வீதிகளில் இறங்கும் போது அங்கே உள்ள ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போகும் அளவுக்குக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

மேலும் ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக கம்பங்களிலும் கூரைகளிலும் ஏறி கூச்சலிட்டு கத்திக்கொண்டிருந்தனர். இதனால் பொது இடத்தில் பல பிரச்சனைகளை கொண்டு வந்தது.
மேலும் பலமுறை சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இந்த கட்டுப்பாடற்ற கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நீதிமன்றம் அவருக்கு ஒரு தடை விதித்தது.
நீதிமன்ற உத்தரவு படி தேவ் அனந்த் கோட் சூட் அணியக்கூடாது என்று தடை விதித்தது. நீதிமன்றம் இப்படி குறிப்பிட்ட ஒரு ஆடை அணிவதற்கு நடிகருக்கு தடை விதித்தது முதல் முறையான சம்பவமாகும்.

தனது தனித்துவமான பேச்சுத்திறன், நடை மற்றும் நவநாகரீக உடைகளால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த அவர், 2011-ம் ஆண்டு மறைந்தார்.
பாலிவுட்டில் இவருடைய இந்த கருப்பு வெள்ளை கோட்டிற்கான சம்பவம் இன்றும் பேசும் பொருளாக மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |