கடைசியில் இது நடந்து விட்டது! உச்சகட்ட மகிழ்ச்சியில் பாரதி கண்ணம்மா வெண்பா
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வேடத்தில் கலக்கி வருபவர் பரீனா ஆசாத், சமீபத்தில் கூட சிறந்த வில்லிக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டது.
அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய பரீனா, 7 வருடம் போராட்டம் என்னுடையது, எனக்கு பெரிய பிரேக் கொடுத்தது பாரதி கண்ணம்மாவின் இயக்குனர் பிரவீன் சார் தான், என்று இயக்குனருக்கு நன்றி கூறினார்.
மேலும், ஒரு பொண்ணு கேட்கக்கூடாத வார்த்தைகளை எல்லாம் நான் கேட்டிருக்கிறேன். பச்சை பச்சையாக கூட திட்டுவாங்க என்று வில்லியாக நடிப்பதை பற்றி வருத்தத்துடன் பேசினார்.
சொல்லப்போனால் சீரியலில் ஹீரோயினை விட வில்லியாக நடிப்பது தான் கஷ்டம். ஏனென்றால் ஒரு கடை திறப்பு விழாவுக்கு கூட வில்லிகளை கூப்பிடுவதில்லை. ஹீரோயினை தான் கூப்பிடுகிறார்கள் என கூறினார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த கடை திறப்பு விழாவிற்கு பரீனாவை அழைத்தார்களாம், அவரும் சென்று மகிழ்ச்சியுடன் கடையை திறந்து வைத்ததாக தெரிவித்துள்ளார்.
அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள பரீனா, என்னையும் கடை திறப்பு விழாவிற்கு கூப்பிட்டாங் பா, நெகடிவ் கதாபாத்திரம் செய்யும் பெண்ணால் கூட பாசிட்டிவ்வை கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.