97வது ஆஸ்கர் விருது விழாவில் விருதுகளை அள்ளிய திரைப்படம்- அப்போ இந்தியாவுக்கு இல்லையா?
97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அதிக விருதுகளை அள்ளிய திரைப்படம் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
97வது ஆஸ்கர் விருது விழா
2025ம் ஆண்டுக்கான 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
இந்த நிகழ்வில் அதிகமான விருதுகளை “அனோரா’ திரைப்படம் குழுவினர் தட்டிச் சென்றுள்ளனர். இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவை நகைச்சுவை நடிகர் கேனன் ஓ பிரைன் தொகுத்து வழங்கினார். இதில் சிறந்த திரைக்கதை, படத்தொகுப்பு, இயக்குனர், நடிகை, திரைப்படம் என மொத்தமாக 5 விருதுகளை அனோரா திரைப்படக் குழுவினருக்கு கொடுக்கப்பட்டது.
திரைப்படத்தை இயக்குனர் ஷான் பேகர் 4 ஆஸ்கர் விருதுகளை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். சிறந்த இயக்குனர், திரைக்கதை, படத்தொகுப்பு, சிறந்த படம் என ஷான் பேகருக்கு 4 விருதுகள் கொடுக்கப்பட்டன.
இதன் மூலம் ஒரே படத்திற்காக 4 விருதுகளை வென்ற முதல் நபர் என்ற சாதனையையும் ஷான் பேகர் பெற்றுள்ளார். மேலும் அனோரா படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை மைக்கி மேடிசனும், ‘தி ப்ரூடலிஸ்ட்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை ஏட்ரியன் ப்ரோடியுன் வென்றனர்.

The Crazy Truth: சிங்கத்துக்கே சவால் விடும் ஹனி பேட்ஜர்... சிக்கினால் 2 நிமிடத்தில் உயிர் இழப்பு உறுதி!
அதே போன்று, இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட அனுஜா குறும்படத்துக்கு விருது கிடைக்கவில்லை.இந்தப் பிரிவில் “ஐம் நாட் எ ரோபட்” என்ற குறும்படத்திற்கு விருது மாற்றிக் கொடுக்கப்பட்டது.
ஆஸ்கர் விருது முழுப் பட்டியல்
- சிறந்த இயக்குனர்: ஷான் பேகர் (அனோரா)
- சிறந்த திரைப்படம்: அனோரா
- சிறந்த நடிகை: மிக்கி மேடிசன் (அனோரா)
- சிறந்த நடிகர்: ஏட்ரியன் ப்ராடி ( தி ப்ரூட்டலிஸ்ட்)
- சிறந்த துணை நடிகர்: கியரென் குல்கின் (ஏ ரியல் பெயின்)
- சிறந்த துணை நடிகை: ஸோயி சல்டானா (எமிலியா பெரேஸ்)
- சிறந்த அனிமேஷன் திரைப்படம்: ப்ளோ
- சிறந்த தழுவல் திரைக்கதை: கான்கிளேவ்
- சிறந்த அசல் திரைக்கதை: அனோரா
- சிறந்த ஆடை வடிவமைப்பு: விக்கெட்
- சிறந்த ஆவணப்படம்: நோ அதர் லேண்ட்
- சிறந்த ஒளிப்பதிவு: தி ப்ரூட்டலிஸ்ட்
- சிறந்த ஆவணக் குறும்படம்: ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா
- சிறந்த எடிட்டிங்: அனோரா
- சிறந்த ஆடை வடிவமைப்பு & சிகை அலங்காரம்: தி சப்ஸ்டன்ஸ்
- சிறந்த ஒரிஜினல் பாடல்: எல் மால் (எமிலியா பெரேஸ்)
- சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: விக்கெட்
- சிறந்த அனிமேஷன் குறும்படம்: இன் தி ஷேடோ ஆப் தி சைப்ரஸ்
- சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்: ஐ ஆம் நாட் ஏ ரோபோ
- சிறந்த ஒலி: ட்யூன் 2
- சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: ட்யூன் 2
- சிறந்த சர்வதேச திரைப்படம்: ஐ ஆம் ஸ்டில் ஹியர்
- சிறந்த ஒரிஜினல் இசை: தி ப்ரூட்டலிஸ்ட்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
