உடல் எடையைக் குறைக்க அதிக சிரமமா? இந்த ஒரே ஒரு டீ போதும்
யாருக்கு தான் ஒல்லியாக வலம்வர வேண்டும் என்ற ஆசை இருக்காது, கொழுப்பை குறைத்து திடகாத்திரமான உடலுடன் இருக்கு பலரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்காக எவ்வளவோ முயற்சி எடுத்தும் நினைத்த மாதிரியான தோற்றத்தை பெறாமல் போகலாம், இதற்காக நம் வீட்டில் உள்ள பொருள் வெந்தயம் உதவுகிறது என்றால் நம்ப முடிகிறதா?
ஆம் சின்னஞ்சிறு வெந்தயத்தில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்பை குறைக்கும் வெந்தயத்தை வைத்து டீ போட்டு குடித்தால் பல நன்மைகளை பெறலாம்.
செய்முறை
ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை எடுத்து பொடியாக்கி கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.
இந்த நீரை 2 அல்லது 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு டீஸ்பூன் தேன் கலந்து அருந்தலாம்.
பயன்கள்
வெந்தயத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் வயதாவதை தடுக்கிறது,
சருமத்தில் உள்ள சுருக்கங்கள் தழும்புகள் சரியாகும்.
தாய்ப்பாலூட்டும் பெண்கள் வெந்தய டீ குடிப்பது தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும்.
இதை தாராளமாக சர்க்கரை நோயாளிகள் அருந்தலாம், சர்க்கரையின் அளவை சீராக்குவதில் முக்கிய பங்காற்றும்.
தினமும் சரியான உடற்பயிற்சி உணவுகளுடன் வெந்தய டீ அருந்துவது உடல் எடையை வெகு விரைவாக குறைக்க உதவும்.
இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இருப்பதால் செரிமானத்தை சீராக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |