fatty liver diet: கல்லீரல் கொழுப்பை கரைக்கும் காய்கறிகள்- ஒரு தடவையாவது சமைத்து சாப்பிடுங்க
கல்லீரல் நோய்களில் கொழுப்பு கல்லீரல் நோய் அதிகம் ஆபத்தான நோயாக பார்க்கப்படுகின்றது.
இந்த நோயை சரியாக கவனிக்காமல் விட்டால் காலப்போக்கில் உயிர் சேதத்தை கூட ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டவசமாக வழக்கமாக நீங்கள் சாப்பிடும் சில காய்கறிகள் கல்லீரலில் சேர்கின்ற கொழுப்பை இல்லாமலாக்குகின்றது.
அதே சமயம் ஒட்டுமொத்த கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
அந்த வகையில், பாதிக்கப்பட்ட கல்லீரலை மீளுருவாக்கம் செய்ய உதவும் காய்கறிகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. முள்ளங்கி
கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகளில் முள்ளங்கி முக்கிய இடத்தை பிடிக்கிறது. அதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்தை சீர்ப்படுத்தி கல்லீரலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுகின்றது. உடலை பாதுகாக்கக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறியாகும். அத்துடன் முள்ளங்கியில் இருக்கும் “என்சைம்கள்” கல்லீரலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.
2. பச்சை பப்பாளி
பச்சை பப்பாளியில் வைட்டமின்கள், என்சைம்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. இது செரிமானத்தை ஊக்கப்படுத்தி நச்சுக்களை வெளியேற்றும்.
அதே சமயம் கல்லீரலையும் சுத்தப்படுத்தும். இதிலிருக்கும் நொதியம் புரதங்கள் மற்றும் கொழுப்புகளை படிய விடாமல் தடுகின்றன. பச்சை பப்பாளியை உணவில் சேர்த்து கொள்வதால் கல்லீரல் செயல்பாட்டை கணிசமாக மேம்படுத்தப்படுத்த முடியும். அதே போன்று கொழுப்பு கல்லீரல் நோயின் அபாயத்தையும் குறைக்கும்.
3. நெல்லிக்காய்
ஆயுர்வேத மருத்துவத்தின் படி நெல்லிக்காய் சாப்பிட்டால் கல்லீரல் தொடர்பான நோய்கள் குணமாகும் என கூறப்படுகின்றது. இந்த பழத்தில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை.
நெல்லிக்காய் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். அதனுடன் கல்லீரல் படிந்திருக்கும் கொழுப்பையும் கரைக்கும். இந்த கனியை பச்சையாகவோ அல்லது சாறாகவோ குடிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |