தந்தையின் செயலால் தலையில் கேமராவுடன் உலாவரும் பெண்.... கடைசியில் கொடுத்த அட்டகாசமான பதில்
மகளை கண்காணிப்பதற்கு தந்தை ஒருவர் கண்காணிப்பு கேமராவை மகளின் தலையில் பொருத்திய சம்பவம் பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது.
தந்தையின் செயல்
இன்றைய காலத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் அதிகமாகி வரும் நிலையில், பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் அதிக கலக்கத்துடன் தான் இருந்து வருகின்றனர்.
பிள்ளைகளை வெளியே அனுப்புவதற்கு பலமுறை யோசிப்பது மட்டுமின்றி, அவர்கள் வீடு திரும்பும் வரை டென்ஷனாகவே இருக்கின்றனர்.
இந்நிலையில் தந்தை ஒருவர் தனது கவலையைப் போக்க செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகள் எங்கு சென்றாலும் அதை கண்காணிக்க அவரது தலையில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார்.
24 மணிநேரமும் தனது மொபைல் போன் மூலமாக மகளை கண்காணிக்க முடியுமாம். இதுகுறித்து அப்பெண்ணிடம் கேமரா பொருத்தியுள்ளது அசௌகரியமாக இல்லையா என்ற கேள்வி எழுப்பியுள்ளனர்.
குறித்த பெண், தனது தந்தை எது செய்தாலும் தனது நலனுக்காகதான் செய்வார் என்றும், அதனால் தந்தையின் முடிவுக்கு தான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Pakistan??
— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 6, 2024
pic.twitter.com/Hdql8R2ejt
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |