மகனை வழியனுப்ப வந்த தந்தையின் பரிதவிப்பு! 10 மில்லியன் பேரை நெகிழ வைத்த காணொளி
மகனை வழியனுப்ப வந்த தந்தை ஒருவர் ஏக்கத்துடன் பிரிந்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மகனை வழியனுப்ப வந்த தந்தை
இந்த உலகில் தாய் தந்தை பாசம் என்பது ஈடு இணையற்றது என்று தான் கூற வேண்டும். பாசத்தினால் கட்டிப்போடும் இந்த உறவுகள் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாதது.
இன்றைய காலத்தில் பாசத்தினை மையமாக வைத்த பல காணொளிகள் உலாவரும் நிலையில், தற்போதும் தந்தை ஒருவர் மகனை ரயில் ஏற்றிவிட்டுவிட்டு ஏக்கத்துடன் செல்லும் காட்சி வைரலாகி வருகின்றது.
மகனை பிரிய மனமில்லாமல் ரயில்வே நிலையத்தில் தவிப்புடன் நிற்கும் தந்தை ஒருவரின் வீடியோ, கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி பவன் ஷர்மா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
அதில் ரயில் நகர அதனுடன் ஷர்மாவின் தந்தையும் நடந்து செல்வதுடன், ரயில் வேகமெடுக்க பரிதவிப்புடுன் கையசைக்கின்றார்.
மேலும் ஷர்மா அந்த பதிவில்,"ஒவ்வொரு முறையும் என் அப்பா என்னை வழியனுப்ப வரும்போது... நான் மறையும் வரை அவர் என்னை பார்த்தபடியே நடந்து வருவார். இது ஒவ்வொரு முறையும் உணர்ச்சிவசப்பட செய்துவிடுகிறது" எனக் குறிப்பிட்டுள்ள இக்காட்சியை 9.8 மில்லியன் பார்வையாளர்கள் அவதானித்துள்ளனர்.