தந்தை இறந்த சோகத்தில் இருந்த பிக்பாஸ் பாலாவின் புதிய பதிவு!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற பாலா அந்த நிகழ்ச்சியை முடித்ததும் பெரும் துயரத்தில் இருந்தார். தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் போட்ட போஸ்டரை பார்த்து அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் களையும் தன்னம்பிக்கையும் கொடுத்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு யாருக்கெல்லாம் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டதோ இல்லையோ பாலாவிற்கு நல்லதே மாற்றம் ஏற்பட்டுவிட்டது.
அதுமட்டுமல்ல பெற்றோரை பற்றியும் கூறியிருந்தார். தற்போது தந்தை இறந்த துக்கத்தில் இருந்த அவருக்கு அவருடைய ரசிகர்கள் ஆறுதல் கூறி வந்தனர். அவருடைய தந்தை இறந்த செய்தியை அவருடைய அண்ணன் தான் முதலில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் .பின்பு பாலாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கன்ஃபார்ம் பண்ணி இருந்தார் .
தந்தையின் இறப்பில் இவர் கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோக்கள் வைரலாக பரவி வந்தது .தந்தையின் இறப்பிற்குப் பிறகு தற்போது இன்ஸ்டாகிராமில் முதல்முறையாக ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். அதை பார்த்ததும் அவருடைய ரசிகர்களும் சக பிக்பாஸ் போட்டியாளர்களும் அவருக்கு ஆறுதலை அளித்து கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.