கொஞ்ச சொல்லி ஆசையாக கேட்கும் மகள்: பார்ப்போரையும் பூரிக்க வைக்கும் காணொளி!
பொதுவாகவே இந்தக் காலக்கட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஸ்மார்ட் போன் தான் உலகம் என வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி போனுக்குள் மூழ்கிப் போனவர்கள் வித்தியாசமாக சில சில வீடியோக்களையும் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிடுவார்கள். அப்படி பதிவிடும் சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும், ஒரு சில வீடியோக்கள் உங்களை அழவைக்கும் மேலும் சில வீடியோக்கள் புத்துணர்ச்சியையும் விழிப்புணர்வுகளையும் கொடுக்கும்.
அதிலும் பல சுவாரஸ்யமான வீடியோக்களும் அவ்வப்போது உலாவிக் கொண்டிருக்கின்றது. அதில் ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
அந்த வீடியோவில் ஒரு குழந்தையும் தந்தையும் தரையில் படுத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தவேளையில் தந்தை ஏதேட்சையாக மகளுக்கு கிச்சிமூட்டி விளையாடி விட்டு அந்தப் பக்கம் படுத்துக் கொள்கிறார்.
இது பிடித்துப் போன அந்தக் குட்டிக் குழந்தை தன் தந்தையிடம் மீண்டும் தன்னைக் கொஞ்ச சொல்லி கையையும், காலையும் அவர் மீது போட்டு சைகை கொடுக்கிறார்.
அவரும் குழந்தையைக் கொஞ்சிவிட்டுப் போக மீண்டும் மீண்டும் தன் தந்தையைக் கொஞ்ச சொல்லி சைகை கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்தக் காணொளியில் அந்தக் குழந்தையின் சிரிப்பிற்காகவே பலமுறை பார்த்து பார்த்து ரசிக்கும் படியாக இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |