Viral Video: உயிரிழந்த மகன்... 6 கோடி ரூபாய் BMW காரை மண்ணில் புதைத்த தந்தை! காரணம் என்ன?
தந்தை ஒருவர் மகன் இறந்த சோகத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள BMW காரை மகனின் கல்லறை அருகே புதைத்த காட்சி வைரலாகி வருகின்றது.
BMW காரை புதைத்த தந்தை
பெற்றோரர்கள் ஒவ்வொருவருக்கும் குழந்தைகளின் சந்தோஷம் தான் முக்கியம். குழந்தையின் சந்தோஷத்திற்காக எவ்வளவு கஷ்டத்தையும் தாங்கிக் கொள்வதுடன், எவ்வாறான ரிஸ்க்கையும் எடுப்பதில் தயங்குவதில்லை.
இங்கு தந்தை ஒருவர் செய்துள்ள காரியம் அவரது மகன் அவர் வைத்துள்ள அளவற்ற பாசத்தினை கண்முன் நிறுத்தியுள்ளது. குறித்த காணொளியும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதாவது காணொளியில் தந்தை ஒருவர் மிகப்பெரிய குழி தோண்டி அதில் BMW காரை புதைக்கின்றார். புதைத்தது மட்டுமின்றி அதனை வேறு யாரும் எடுத்துச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக கான்கிரீட்டையும் போட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி அதனுள் காரின் சாவியையும் போட்டு புதைத்துள்ளார். குறித்த சம்பவம் ஐரோப்பாவில் மாஸ்கோ என்ற நகரத்தில் நடந்து்ளளது.
காரணம் என்ன?
அதாவது தனது மகனின் பிறந்தநாளுக்கு அவன் ஆசைப்பட்ட குறித்த காரை 6 கோடி ரூபாய் செலவு செய்து வாங்கிக் கொடுத்துள்ளார்.
புதிய காரில் மகனும் தனது பெற்றோரை மகிழ்ச்சியாக அழைத்துச் செல்லவும் சென்றுள்ளார். ஆனால் கார் வாங்கிய சில தினங்களில் மகன் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதனால் மகனை இழந்த சோகத்தில் இருந்த தந்தைக்கு, குறித்த காரை பார்க்கும் போது அவரது நினைவினால் அதிகம் மனம் கஷ்டப்பட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் மகனின் கல்லறைக்கு அருகே குறித்த காரையும் புதைத்து, இவ்வாறு கான்கிரீட் போட்டுள்ளார். மகன் இல்லாத இந்த உலகில் எதற்கான இந்த ஆடம்பரம் என்று? தந்தை செய்த சம்பவம் மகன் மீது வைத்துள்ள பாசத்தினை வெளிக்காட்டியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |