எலெக்ட்ரிக் பைக் வெடித்து தந்தை மகள் பரிதாப பலி! நடந்தது என்ன?
எலெக்ட்ரிக் பைக் வெடித்து விபத்து ஏற்பட்டதில் தந்தை மகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அடுத்த சின்ன அல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் துரை வர்மா(49). இவரின் மகள் பிரீத்தி(13). இவர்கள் இருவரும் திருவிழா ஒன்றில் பங்கேற்க சென்றபோது, வாகனத்தை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியுள்ளனர்.
தீடீரென பற்றிய தீ
இதனிடையே எலெக்ட்ரிக் பைக் நள்ளிரவில் சார்ஜ் அதிகமாகி வயரில் தீப்பிடித்து எரிந்து பைக் வெடித்துள்ளது. இதனால் அருகிலிருந்த மற்றொரு பைக்கும் தீப்பற்றி எரிந்தது.
இதனைக்கண்டு வீட்டிற்குள்ளிருந்து பார்த்த தந்தையும் மகளும் புகைமூட்டம் அதிகமாக இருப்பதால் வெளியே செல்லவேண்டாம் என நினைத்து கழிவறையில் பதுங்கியிருக்கின்றனர்.
மூச்சுத்திணறி உயிரிழப்பு
ஆனால், எதிர்பாராதவிதமாக கழிவறையிலும் புகைமூட்டம் சூழ்ந்திருக்கிறது. இதனால் மூச்சுத்திணறி கழிவறையிலேயே தந்தை மகள் இருவரும் உயிரிழந்தனர்.
ஐபிஎல்: கொல்கத்தா அணிக்கு எதிராக தோனி படைத்த புதிய சாதனை!
பின்னர், அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் அளித்திருக்கின்றனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.
உடல்களை மீட்ட காவல்துறையினர், பிரதேப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.