மாட்டை வேட்டையாட முயன்ற சிங்கம்! அடுத்த நொடியே விவசாயி என்ன செய்தார் தெரியுமா?
இந்தியாவில் சிங்கம் ஒன்று மாட்டை வேட்டையாட முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சோம்நாத் என்ற நகரிலேயே இத்திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது. காரில் குழுவினர் பயணித்துக்கொண்டிருந்த போது வீடியோவை எடுத்துள்ளனர்.
சாலையில் மாட்டின் கழுத்தை பத்திரமாக பிடித்துக்கொண்ட சிங்கம் ஒன்று, கடிக்க முயன்றுள்ளது. சிங்கத்தின் பிடியில் இருந்து தப்பி மாடு எவ்வளவோ முயன்றும் பலனில்லாமல் போகிறது.
அந்நேரத்தில் அந்த வழியே வந்த விவசாயி ஒருவர் சற்றும் யோசிக்காமல், சிங்கத்தை விரட்டுகிறார். முகத்தில் அச்சம் ஏதுமின்றி சிங்கத்தின் அருகில் சென்றதும் பயந்து கொண்டு விலகிச்சென்றது, மாடும் காப்பாற்றப்பட்டது.
இந்த வீடியோ காட்சிகள் வைரலாக பலரும், விவசாயியின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.
ગીર સોમનાથ જિલ્લાના આલીદર ગામે સિંહણ દ્વારા ગાય ઉપર હુમલો કરેલ ત્યારે ખેડૂતે #Credit કિરીટસિંહ ચૌહાણ પોતાની ગાયને એક ખમીરવંતો પ્રયાસ કરેલ અને સફળતા મળેલ.
— Vivek Kotadiya?? BJP (@VivekKotdiya) June 29, 2023
ખુબ ખુબ સલામ#lion #animalattack #cow #lioness #kingofthejungle #hunt #wildlife #india #nationalgeographic #discovery pic.twitter.com/lDYGub9bfZ
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |