வயசானாலும் அழகு குறையவில்லை! த்ரிஷாவை புகழ்ந்து தள்ளிய ரசிகர்கள்
இணையத்தில் த்ரிஷா வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.
த்ரிஷா
த்ரிஷா தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார் .
விஜய், அஜித் என பலருடன் நடித்து பல வெற்றிப்படங்களை இவர் கொடுத்துள்ளார்.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வம் படத்தை தொடர்ந்து தற்போது த்ரிஷாவின் நடிப்பில் சரவணன் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் தான் ராங்கி.
இந்தப் படத்திற்கு இயக்குநர் முருகதாஸ் கதை எழுதியுள்ளார்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா நடித்துள்ளார். அதற்கான ப்ரோமஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
வீடியோ பதிவு
ப்ரோமஷனுக்காக புதிய வீடியோ ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா.
இதற்கு ரசிகர்கள், “மெழுகு டாலு நீ”, “வயசானாலும் அழகு குறையவில்லை” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் பெரிதும் வைரலாகி வருகின்றது.
When in doubt,move…😉💃🏻 pic.twitter.com/tyCPpQg44b
— Trish (@trishtrashers) December 26, 2022