ரசிகர் கேட்ட கிடுக்குபிடியான கேள்வி... பிக்பாஸ் இதையெல்லாம் காட்டவில்லை! குற்றச்சாட்டு வைத்த ஷிவானி
பகல்நிலவு மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பின்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தினையே கொடுத்தார். கடந்த சீசனில் லொஸ்லியாவை அவரது தந்தை வந்து சத்தம் போட்டது போன்று இந்த சீசனில் ஷிவானியை அவரது அம்மா பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வெழுத்து வாங்கினார். அதன்பின்பு கமல் ஷிவானி அம்மாவை காணொளியில் அழைத்து அவரை பேச வைத்தார்.
ஷிவானி தனது சமூகவலைத்தளங்களில் பதிவிடும் கிளாமரான புகைப்படத்திற்கு ரசிகர்கள் குவிந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்பு தனது கவர்ச்சியான புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். பிக் பாஸுக்கு முன் சமூக வலைதளத்தில் இவருக்கு இருந்த ஆர்மி கூட இவர் பிக்பாஸில் பங்குபெற்ற பின் அமையவில்லை.
காரணம் இவர் பாலாவின் பின்னே சுற்றியதை தவிர ரசிகர்கள் எதிர்பார்த்தது போன்று நடந்து கொள்ளவில்லை. தற்போது லைவ் காணொளியில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஷிவானி பதில் அளித்த போது, ரசிகர் ஒருவர் ‘பிக்பாஸ்ல ஏன் நிறைய பேசல’ என்று கேட்டதர்க்கு, நான் நிறைய பேசினேங்க உங்களுக்கு காட்டல என்று கூறியுள்ளார்.
Dei @vijaytelevision
— Anbu (@Mysteri13472103) February 2, 2021
enn da en thalaivi pesnatha kaatala . . #shivaninarayanan #shivani #BiggBoss4Tamil #BiggBoss pic.twitter.com/6h2dKW0TO7