கணவர் முன்பு நடிகை சமந்தாவிடம் காதலை கூறிய ரசிகர்... ராஜ் நிடிமோரு கொடுத்த ரியாக்ஷன்
நடிகை சமந்தா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் கையில் பூ கொத்து கொடுத்து காதலைக் கூறியது வைரலாகி வருகின்றது.
நடிகை சமந்தா
தமிழில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா பல பிரச்சனைகளுக்கு மத்தியில் தற்போது தனது இரண்டாவது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்.
தமிழ் மட்டுமின்றி மற்றும் பல மொழிகளில் நடித்து அசத்தும் சமந்தா மா இன்றி பங்காரம் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஐதாபாத்தில் நடைபெற்றுள்ளது.
Super Singer Junior: பார்வையற்ற சிறுவனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்... இசையமைப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ் என்ன?
அப்பொழுது மேடையில் அமர்ந்திருந்த சமந்தாவை நோக்கி வந்த ரசிகர் ஒருவர் மண்டியிட்டு பூங்கொத்து ஒன்றினைக் கொடுத்து காதலைக் கூறியுள்ளார்.

காதலைக் கூறியது மட்டுமின்றி, அவருடன் செல்பியும் எடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.
இந்த எதிர்பாராத நிகழ்வினால் கணவர் ராஜ் நிடிமோரு பெரும் அதிர்ச்சியடைந்ததுடன், பாதுகாப்பு பணியாளர்களும் ரசிகர்களை அழைத்துச் செல்ல முயன்றனர்.
ஆனாலும் சமந்தா குறித்த ரசிகரை ஏமாற்றாமல் புன்னகையுடன் அவருடன் செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார். இப்படத்தினை சமந்தாவின் கணவர் ராஜ் நிடிமோரு தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Super Singer Junior: பார்வையற்ற சிறுவனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்... இசையமைப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ் என்ன?
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |