சமந்தாவிற்கு கோவில் கட்டி கடவுளாக வழிபடும் ரசிகர்... நம்பமுடியாத உண்மை
நடிகை சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர் அவருக்கு கோவில் கட்டி கடவுளாக வழிபட்டு வருகின்றதைக் குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகர் சமந்தா, கடந்த சில வருடங்களாக மயோசிடிஸ் நோயினால் பாதிக்கப்பட்டதால், சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.
நடிகர் நடிகைகளில் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்வதை நாம் பார்த்திருப்போம், ஆனால் இங்கு நபர் ஒருவர் சமந்தாவிற்கு சிலைவடித்து அவரை கடவுளாக வழிபட்டு வருகின்றார்.
ஆந்திர மாநிலம் தெனாலி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய சொந்த ஊரில் தன் வீட்டின் அருகேயே சமந்தாவின் சிலை அடங்கிய கோவிலை கடந்த 2023-ம் ஆண்டு கட்டினார்.
கடவுளாக வழிபடும் ரசிகர்
இந்த கோவில் நடிகை சமந்தாவின் பிறந்தநாளை ஒட்டி கடந்த 2023-ம் ஆண்டு திறக்கப்பட்டது. அந்த ரசிகரின் இந்த செயலை சிலர் வியந்து பாராட்டினாலும், இதுபோன்ற பையத்தியக்கார ரசிகர்கள் இன்னும் இருக்கிறார்களா என்ற கேள்வியையும் மக்கள் வைக்கின்றனர்.
சமந்தா நடித்த சுபம் என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், தற்போது பங்காரம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகும் வெப் தொடர் ஒன்றிலும் சமந்தா நடித்து வருகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |