மேடையில் சரிந்து விழுந்த பிரபல ராப் பாடகர்! பரிதாபமாக உயிரிழந்த சோகம்
அமெரிக்காவில் பிரபல ராப் பாடகர் மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போதே சரிந்து உயிரிழந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரிந்து விழுந்த பாடகர்
அமெரிக்காவில் ஆங்கிலத்தில் ராப் பாடல்கள் பாடும் திறமையான இசைக்கலைஞர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பிக் போக்கி(45).
ஹூஸ்டனை சேர்ந்த பிக் போக்கி, கடந்த சனிக்கிழமை இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பாடிக்கொண்டிருந்த போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிவிழுந்துள்ளார்.
உடனே இவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
ஆனாலும் இவரது மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. இவரது உண்மையான பெயர் மில்டன் பவல். 1999 ஆம் ஆண்டு தனது முதல் தனி ஆல்பமான The Hardest Pit in the Litter’ வெளியானதை தொடர்ந்து இவர் பிரபலமாகியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |