மாடியிலிருந்து தவறி விழுந்து பிரபல பாப் பாடகர் மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்
உலக அளவில் பிரபலமான பாப் பாடகர் லியாம் பெய்ன் மாடியிலிருந்து கீழே விழுந்து உரிழந்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி்யுள்யர்.
பாடகர் லியாம் பெய்ன்
பாப் இசைக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் தான் பாடகர் லியாம் பெய்ன். இவரது பிரபலமான பாப் பேண்டில் ஒன்து தான் 1 டி ஆகும்.
இந்த பாப் பேண்டானது கடந்த 2010ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இவர்கள் பாடும் பாடல்களுக்கென்று இங்கிலாந்து மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் ரசிகர்கள் அதிகளவில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1993ம் ஆண்டு லண்டனில் பிறந்த இவர், 2008ம் ஆண்டு தி எக்ஸ் ஃபேக்டர் என்ற டெலிவிஷன் சீரிஸுக்காக ஆடிஷனில் கலந்துகொண்ட போது அதிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.
பிறகு ஒன் டைரக்ஷன் பேண்டில் சேர்ந்தார். அந்த க்ரூப்பிலேயே மிகச்சிறந்த பாப் கலைஞராக தன்னை மாற்றிக்கொண்டார் பெய்ன். ஆனால் சில காரணங்களால் அவர் அந்த ஒன் டைரக்ஷன் குழுவிலிருந்து விலகிவிட்டார்.
திடீர் இறப்பு
லியாம் பெய்ன் கேத் கேசிடி என்பவரைக் காதலித்து வரும் நிலையில், இருவரும் கடந்த மாதம் 30ம் தேதி அர்ஜெண்டினாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இரண்டு வாரங்கள் சேர்ந்து தங்கியிருந்து சுற்றிப்பார்த்து மகிழ்ச்சியடைந்த இவர் கடந்த 14ம் தேதி கேத் தனது சொந்த வேலைகள் காரணமாக அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.
காதலி சென்ற பின்பு மூன்றாவது மாட்டியில் பெய்ன் தங்கியிருந்த நிலையில், திடீரென மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இவரது மரணம் ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் லியாம் தங்கியிருந்த ஹோட்டலில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உண்மையில் விபத்தா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் விசாரணை சென்று கொண்டிருக்கின்றது.