மனோஜ் கடைசியாக பேசிய பிரபலம் யார் தெரியுமா?
“மனோஜ் கேட்கும் போதே அவருக்கு உதவி செய்யாமல் சடலத்திற்கு முன்னர் கண்ணீர் வடிப்பது நியாயமா?” என மூத்த பத்திரிக்கையாளர் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் மனோஜ்
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கடந்த மார்ச் 26-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது.
மனோஜ் தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய பிரபலங்களில் ஒருவர். இவர் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் மக்களை கவராவிட்டாலும், இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையுடன் பயணித்தார்.
இவர், இறந்த பின்னர் பல பிரபலங்கள் அவர் செய்த உதவிகள் மற்றும் அவருடைய குணம் பற்றி பேசி வருகிறார்கள்.
அந்த வகையில், தம்தி ராமையா பேசும் பொழுது,“ மனோஜ் மிகவும் பாவம், அதிகமான அழுத்தம் தான் அவருடைய இறப்பிற்கு காரணம்..” என பேசியிருந்தார்.
உதவிச் செய்யாமல் மறுத்த பிரபலம்
இதனை தொடர்ந்து மூத்த பத்திரிக்கையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ் பேசுகையில், “ தனது தந்தையைப் போன்று சினிமாவில் தன்னால் சாதிக்க முடியவில்லை என்ற அழுத்தம் தான் அவருடைய இறப்புக்கு காரணம். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தாஜ்மஹால் திரைப்படம் சரியாக ஓடவில்லை.
நடிகர், இயக்குநர், உதவி இயக்குநர் உள்ளிட்ட பல வேலைகள் பார்த்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது கூட மனோஜ் தனது வலியையும், வேதனையும் ஒரு விஐபியிடம் பேசியிருக்கிறார்.
அவரோ பாரதிராஜாவிடம் பேசுவதாக சொல்லிருக்கிறார். அப்படி அவர் பேசி முடித்த கொஞ்ச நேரத்திலேயே மனோஜ் உயிரிழந்து விட்டார். தனது வேலையில் மட்டுமே கவனமாக இருக்க கூடியவர்.
அவர் எந்த சர்ச்சையிலும் இதுவரையில் சிக்கவில்லை. அவர் உதவி கேட்டு வந்த போதே யாரேனும் அவருக்கு உதவி செய்திருந்தால் இன்று அவர் நம்முடன் இருந்திருப்பார்...” எனக் கண்ணீருடன் பேசியிருந்தார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
