இரகசியமாக பிரபல நடிகையை கரம்பிடிக்கும் இளைஞர்! மாப்பிள்ளை என்ன செய்கிறார் தெரியுமா?
பிரபல நடிகை ராக்கி சாவந்த் ரகசியமாக திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தற்போது சமுகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா பயணம்
பாலிவுட் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் ராக்கி சாவந்த்.
இவர் சினிமாத்துறை மட்டுமன்றி அரசியல், நாட்டியக் கலைஞர், அழகுப் பதுமை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் உள்ளிட்ட துறைகளில் அட்டகாசமாக பணியாற்றி வருகிறார்.
மேலும் இவர் இந்தித் திரைப்படங்கள் உட்பட, கன்னட, மராத்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்து தனிக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து ராக்கி சாவந்த் அடில் கான் துரானி என்பவரை நீண்டக்காலமாக காதலித்து வந்துள்ளார்.
காதல் இரகசிய திருமணம்
இந்நிலையில், இவர் தன்னுடைய காதலன் அடில் கான் துரானியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள்.
மேலும் இந்த புகைப்படம் இருவரும் பதிவு திருமணம் செய்யும் போது எடுக்கப்பட்டுள்ளது.
இதன் புகைப்படத்தை பார்க்கும் போது ஒரு திருமண பதிவாளர் அலுவலகத்தில் இருப்பதுபோலவும் அவசர அவசரமாக திருமணம் செய்துக் கொள்வது போலவும் இருக்கிறது.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்படுவதுடன் இவர்களின் திருமணத்தில் ஏதோவொரு குழப்ப நிலை இருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.