பெற்ற பிள்ளைகளுக்கு கடன் கொடுத்துள்ள விஜய்... எவ்வளவு தெரியுமா?
தவெக தலைவர் விஜய் நேற்று பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இவரது சொத்து மதிப்புடன் தன்னிடம் யார் யார் கடன் வாங்கியுள்ளனர் என்ற விபரத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கூட்டணி கட்சிகளுடன் சேராமல் தனித்து 234 தொகுதியிலும் போட்டியிடுகின்றார்.
இதில் விஜய் இரண்டு தொகுதியில் போட்டியிடுகின்றார். அதாவது பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடும் நிலையில், மற்ற தொகுதிக்கான தலைவர்களையும் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

நேற்றைய தினம் பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு தனது பிரச்சாரத்தினை தொடங்கினார். ஆனால் அவர் திட்டமிட்ட இடங்கள் வரை செல்லாமல் பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றார்.
இதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்த நிலையில், இன்று அவர் மீது புகாரும் எழுந்துள்ளது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டும் வருகின்றனர்.

கடனாளியான குடும்பத்தினர்
பொதுவாக தேர்தலில் போட்டியிடும் நபர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது சொத்து விபரம் குறித்து பிரமாணப்பத்திரமும் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்நிலையில் விஜய் தனது பிரமாணப்பத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள சொத்து விபரம் நேற்றைய தினத்தில் பதிவிட்டிருந்த நிலையில், தற்போது அவர் யார் யாருக்கு கடன் கொடுத்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

விஜய்யிடன் பெற்றோர்கள் முதல் மனைவி, பிள்ளைகள் வரை என அனைவரும் கடனாளியாக காணப்படுகின்றனர். இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, விஜய்யின் மனைவி சங்கீதா ரூ. 12.60 கோடியும், தந்தை சந்திர சேகர் ரூ.3.02 கோடியும், தாய் ஷோபா ரூ.87.12 லட்சமும், மகன் ஜோசன் சஞ்சய் ரூ.8.78 லட்சமும், மகள் திவ்யா ஷாஷா ரூ.4.6 லட்சமும் கடனாக பெற்றுள்ளார்களாம்.
மேலும் தமிழக வெற்றி கழகத்தின் பொது செயலாளரான என். ஆனந்த் விஜய்யிடம் ரூ.3 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |