தமிழ் எழுத்தைப் பற்றிய இந்த உண்மை உங்களுக்குத் தெரியுமா?
தமிழ் என்பது அறிவு மாத்திரமல்ல அது ஒரு உணர்வும் கூட, தமிழ் ஆழம் தோண்ட தோண்ட செல்லும் நிலம் போல எவ்வளவு படித்தாலும் தீராத திகட்டாத அறிவு களஞ்சியம்.
தமிழ் தான் மிகப்பழமையான மொழி என நாம் அறிந்திருந்தாலும், அவற்றை நாம் சிதையாமல் பார்க்கிறோமா என்றுக் கேட்டால் முழுவதுமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இவ்வாறு நாம் தமிழின் ஆழம் வரை சென்று பார்ப்பதற்கு உங்களுக்கு உதவும் தளம் தான் பாவலர் மதுரன் தமிழவேளின் uchchi.com
இத்தளத்தில் நீங்கள் கற்க விரும்பும் தமிழ் இலக்கணம், கவிதை, கவிதை இலக்கணம், சிறுவர்களுக்கான தமிழ், இசையும் கலையும் என அனைத்தையும் தெளிவான புரிதலோடு கற்றுக் கொள்ளலாம்.
அடிப்படை தமிழ் இலக்கணம்
தமிழில் உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து, ஆய்த எழுத்து என்று நான்கு வகை எழுத்து இருப்பதை நாம் அறிவோம்.
இப்போது சில கேள்விகள் எழுகின்றன:
அ, ஆ, இ, ஈ முதலானவை ஏன் ‘உயிர் எழுத்து’ என்று அழைக்கப்படுகின்றன? அடிப்படைத்-தமிழ்-இலக்கணம்/ க், ங், ச், ட், த், ப் முதலானவை ஏன் ‘மெய்’ என்று அழைக்கப்படுகின்றன? அடிப்படைத்-தமிழ்-இலக்கணம்/ க, கா, ச, சா, தி, தீ முதலானவை ஏன் ‘உயிர்மெய்’ என்று அழைக்கப்படுகின்றன?
மெய் என்றால் உடம்பு என்று பொருள். உயிரற்ற உடம்பு அசையாது. அதேபோல அ, ஆ, இ, ஈ முதலான உயிர் எழுத்தின் துணை இல்லாமல் உடம்பெழுத்தால் – மெய்யெழுத்தால் (க், ங், ச், ட் ..) தனித்து ஒலிக்க முடியாது; அசைய முடியாது.
‘ப்’ என்று தனியே சொல்லிப்பார்த்தீர்கள் என்றாலும் அது ‘இப்’பென்று உயிருடன் கூடியே ஒலிக்கும். உடம்பை விட்டு நீங்கிப்போனாலும் உயிருக்கு வாழ்வு உண்டு என்பது இந்திய மெய்யியல் மரபில் நிலவும் நம்பிக்கை.
அதுபோலவே, மெய்யெழுத்துடன் சேரா விட்டாலும் உயிர் எழுத்து தனித்து இயங்கும்; அசையும். அசைவது உயிர். அசையாமல் கிடப்பது மெய். மெய்யெழுத்து அசைய வேண்டுமென்றால், உயிருடன் சேர்ந்து ‘உயிர்மெய்’ ஆக வேண்டும்.
(‘யாப்பிலக்கணம்’ என்று அழைக்கப்படும் கவிதை இலக்கணத்தில் ‘அசை’ என்ற செய்யுள் உறுப்பை விளங்கிக் கொள்வதற்கு எழுத்தொலியின் அசைவு என்ற எண்ணக்கருவை மனதில் இருத்துவது இன்றியமையாதது)
யாவர்க்கும்-யாப்பிலக்கண/ எவ்வளவு நுட்பமாகச் சிந்தித்திருக்கிறார்கள் நமது மூதாதையர்கள் என்று வியப்பு ஏற்படுகிறது, அல்லவா?
க் என்ற மெய்யோடு அ என்ற உயிர் சேரும்போது (க் + அ) ‘க’ என்ற உயிர்மெய் உருவாகிறது. அசையாமல் இருந்த மெய் (உடம்பு) உயிர் கூடியவுடன் அசையத் தொடங்குகிறது!
பொதுவாகப் புலம்பெயர் நாடுகளில் வளரும் சிறுவர்களுக்குத் தமிழ் சொல்லித்தரும்போது இந்த இடத்தில் ஒரு கேள்வி கேட்பார்கள்.
சிறுவர்களுக்கானதமிழ்/ மெய்யெழுத்தோடு (க்) உயிரெழுத்து (அ) சேரும்போது தானே உயிர்மெய் உருவாகிறது?
மெய் + உயிர் ஐ‘உயிர்மெய்’ என்று சொல்வதை விட ‘மெய்யுயிர்’ என்று அழைப்பது அல்லவா சரி? இந்தக் கேள்விக்கு எப்படி விளக்கம் சொல்வது?
உண்மையில், மெய் உயிர்க்கும்போது உயிர்மெய் தோன்றுகிறது. அதாவது, உயிர்மெய் என்பது: உயிர்த்த மெய், உயிர்க்கின்ற மெய். அவ்வகையில் உயிர்மெய் என்பதை வினைத்தொகையாக விளக்கலாம்.
முக்காலமும் உணர்த்தும் சிறப்பு வினைத்தொகைக்கு உண்டு. உயிர்மெய் என்பதை உம்மைத்தொகை என்பாரும் உளர் (உயிரும் மெய்யும்).
வினைத்தொகை, உம்மைத்தொகை ஆகிய இரண்டையும் பற்றி இன்னொரு பதிவில் விரிவாக ஆராயலாம்.
இப்படியான தமிழ் இலக்கண அடிப்படைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள விரும்புவோர் uchchi.com இன் ‘அடிப்படைத் தமிழ் இலக்கணம்’ கற்கை நெறியில் இணைந்து கொள்ளுங்கள்.