முகப் பருக்களால் அவதிப்படுகின்றீர்களா? வராமல் தடுக்க இதை செய்தால் போதும்
இன்றைய இளைய தலைமுறையினரின் அழகை அதிகமாக பாதிக்கக்கூடியது முகப்பரு ஆகும். முகப்பரு பிரச்சினையை எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
முகப் பருக்களை நீக்க என்ன செய்வது?
தினமும் இரண்டு முறை கட்டாயம் முகத்தை மென்மையான சோப்பு கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு செய்யும் போது எண்ணெய் பசை அதிகம் கொண்ட சோப்பை பயன்படுத்த வேண்டாம்.
பருக்களை தொடுவது, நகத்தினால் கிள்ளிவிடுவது இந்த காரியங்களை செய்தால் மேலும் மோசமாகும்.
கற்றாழை, தேன், எலுமிச்சை சாறு போன்ற இயற்கை பொருட்கள் பருக்களை உலர வைக்க உதவும்.
அதிகப்படியான எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பதுடன், ஆரோக்கியமான உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியமாகும். அதிகமாக இருந்தால் உடனே தோல் மருத்துவரை அனுக வேண்டும். ஏனெனில் தோலுக்கு ஏற்ப மருந்துகளை பரிந்துரைப்பார்.
மேலும் பருக்கள் வராமல் தடுக்க வேண்டுமெனில், முகத்தை சுத்தமாகவும், அதிகமான எண்ணெய் பசை பொருட்களை பயன்படுத்தாமலும், சூழிய ஒளியில் அதிகம் நிற்காமலும், மன அழுத்தம் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |