முகம் எப்பொழுதும் பொலிவாக இருக்க வேண்டுமா? தயிரை இப்படி பயன்படுத்துங்க
முகம் பொலிவுடன் இருப்பதற்கு தயிர் மற்றும் பிரிஞ்சி இலை இவற்றினை வைத்து பேஸ் மாஸ்க் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் மோசமான உணவு மற்றும் வாழ்க்கை முறையினால் உடல் நலப் பிரச்சினை மட்டுமின்றி சருமத்திலும் பல பிரச்சினைகளை பலரும் சந்தித்து வருகின்றனர்.
சருமத்தினை பாதுகாக்க விலையுயர்ந்த பல கிரீம்களை வாங்கி பயன்படுத்தி வந்தாலும், அவை சரியான தீர்வை கொடுக்காமல், சில தருணங்களில் தோல் அலற்சியை ஏற்படுத்துகின்றது.
முகப் பொலிவை தரும் தயிர்
முகம் பொலிவாக இருக்க நினைப்பவர்கள் தயிரை பயன்படுத்தி நல்ல பலனைப் பெறலாம்.
முகத்தின் வயதான தோற்றத்தினை போக்கவும், முககறைகளை நீக்கி பிரகாசமாக்குவதற்கு பிரிஞ்சி இலை மற்றும் தயிர் உதவியாக இருக்கின்றது.
பே இலை தூள், தயிர், மஞ்சள்தூள், தேன் ஆகியவற்றை கொண்டு நல்ல ஒரு பேஸ் பேக் தயார் செய்யவும். முகத்தை நன்கு கழுவிவிட்டு இந்த பேக்கை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் நன்றாக தடவவும்.
நன்கு காய்ந்த பிறகு நீரில் முகத்தை கழுவவும். வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை இவ்வாறு தடவி வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.
முகப்பரு, வெயிலின் தாக்கம் ஏற்படாமல் இந்த பேஸ் பேக் பாதுகாப்பதுடன், முகத்தில் ஈரப்பதத்தினை கொடுத்து, சருமம் வறட்சியடைவதைத் தடுக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |